இரண்டு போலீஸ்காரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது: இது ஊடகங்களுக்கு கொடுக்கப்படும் இனிப்பு மிட்டாய்

“நீங்கள் என்னை நம்ப வேண்டாம். பொறுத்திருந்து பாருங்கள். தனிப்பட்ட முறையில் நான் காத்திருக்க விரும்பவில்லை. ஏனெனில் முடிவு எனக்கு நன்கு தெரியும்.”

படப்பிடிப்பாளரைத் தாக்கியதாக இரண்டு போலீஸ்காரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

சா டாம்ஸ்: வெகு காலத்திற்கு முன்பு ஒர் அதிகாரியும் கனவானுமான சான் செங் முன் என அழைக்கப்பட்ட ஒருவர், தமது உதவியாளர்கள் செய்த தவறுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆகவே தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) அல்லவா பொறுப்பேற்க வேண்டும்.

அல்லது ஆணைகளை வெளியிடும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் பொறுப்பேற்க வேண்டும். அவர் பின்னர் அது இயல்பான நடைமுறைகள் எனக் கூறிக் கொண்டார். போலீஸ் படையைப் பற்றி சிறிதளவு கூட தெரியாமல் அந்த மனிதர் பெரிதாகப் பேசுகிறார்.

அது அன்வார் இப்ராஹிமைப் போன்றது தான். அவர் ஒரு நாள் துணைப் பிரதமராக இருந்தார். அடுத்த நாள் தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலாகி விட்டார்.

அவர்கள் நமது பணத்தை மக்களுக்கு ‘லஞ்சமாக’ கொடுத்து அவர்களுக்கு வாக்களிக்குமாறு செய்வதால் நாம் எளிதாக எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம். அவர்கள் சொர்க்கத்துக்குப் போவதற்குக் கூட லஞ்சம் கொடுப்பார்களோ !

டூட்: ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதற்காக இன்னும் பல அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்படுவதற்காக நான் காத்திருக்கிறேன்.

கர்மா: நான் அவர்களுடைய பிள்ளைகளை எண்ணி வருந்துகிறேன். காரணம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய தங்கள் தந்தை மக்களைத் தாக்கினார் என அறிந்து கொண்டு அவர்கள் வளரப் போகிறார்கள். எந்தத் தவறும் செய்யாத ஆயுதமில்லாத மக்களை அவர்கள் அடித்த போது அந்தப் பிள்ளைகள் மனதில் என்ன ஒடியிருக்கும் ?

பெண்டர்: இது ஊடகங்களுக்கு கொடுக்கப்படும் இனிப்பு மிட்டாய். ஆர்டிஎம்-‘Drama Minggu Ini’-யில் இன்னொரு அத்தியாயத்தை நாம் காணப் போகிறோம். அதனை புகழ் பெற்ற போலீஸ் திரைப்பட இயக்குநர் யூசோப் ஹஸ்லாம்  தயாரிப்பார்.

யூசோப்பின் எல்லா நாடகங்களையும் போன்று இதிலும் இறுதியில் போலீஸ்காரரே வெல்வார். இந்த நாடகத்தின் முடிவும் அப்படித்தான் இருக்கும்.

நீங்கள் என்னை நம்ப வேண்டாம். பொறுத்திருந்து பாருங்கள். தனிப்பட்ட முறையில் நான் காத்திருக்க விரும்பவில்லை. ஏனெனில் முடிவு எனக்கு நன்கு தெரியும்.

துப்பாக்கிக்காரன்: நூற்றுக்கணக்கான போலீசாரில் இருவர் மட்டும் தானா பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர் ? வழக்கம் போல இதுவும் ஒரு நாடகமே.

அகுதான்: நாம் நமது நீதி முறையில் நம்பிக்கை வைக்க வேண்டும். சட்டத்துறைத் தலைவர் தமது வேலையை சரியாகச் செய்வார் என நாம் நம்ப வேண்டும். தாங்கள் நியாயமானவர்கள் என்பதை நிரூபிக்க நாம் அரச மலேசியப் போலீஸ் படைக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.

அடையாளம் இல்லாதவன்_3ec6:  போலீஸ் படையில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் ஏன் பொறுப்பேற்கவில்லை. பாராட்டாக இருந்தால் அவர்கள் எற்றுக் கொள்வர். தவறு என்றால் அதனை கீழ் நிலையில் உள்ளவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்.

உண்மையில் மோசமான நிர்வாக நடைமுறைகள். போலீஸ் படையின் நாடகம் தொடங்கி விட்டது. ஒரே வசனம். ஒரே முடிவு. வழக்கு மூடப்பட்டு விடும்.

சிப்முங்: வழக்கம் போல அம்னோ இரண்டு பலியாடுகளை முன்னுக்கு வைத்துள்ளது. அது அல்தான்துயா வழக்கிலிருந்து மாறுபட்டதாகத் தெரியவில்லை.

இறுதியில் அவர்கள் இருவரும் ஜாமீனில் வந்து விடுவர். “மேலும் தொடர வேண்டியதில்லை” என அந்த வழக்கிற்கு முத்திரை குத்தப்பட்டு விடும்.

சம்பா: அவ்வாறு செய்யுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஐஜிப்-யும் துணை ஐஜிபி-யும் எங்கே போனார்கள் ?  அவர்களை நீதிமன்றத்துக்குக் கொண்டு வாருங்கள். அவர்களை வெட்கப்படும்படி  செய்ய வேண்டும்.

ஜனநாயகவாதி: ஆகவே அவர்கள் மக்களிடம் இவ்வாறு சொல்லப் போகிறார்கள்: “இங்கே பாருங்கள். நாங்கள் நியாயமாக நடந்து கொள்கிறோம். நாங்கள் போலீஸ்காரர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளோம். நீங்கள் ஏன் குறைப்பட்டுக் கொள்கின்றீர்கள் ?”

சிவிக்: படப் பிடிப்பாளரை யார் தாக்கியது என்பது முக்கியமல்ல. ஏன் என்ற கேள்வியே நீதிமன்றத்தில் எழுப்பப்பட வேண்டும். நோக்கம் என்ன ? அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள் ? கேமிராக்களுடன் உள்ள மக்களைக் குறி வைக்குமாறு உத்தரவிடப்பட்ட்டதா ? அந்தக் கேள்விகள் அனைத்தும் கங்காரு நீதிமன்றத்தில் எழுப்பப்படப் போவதில்லை.

TAGS: