அம்பிகாவின் வீட்டின்முன் இரு-நாள் சந்தை

அறுபது சிறு வியாபாரிகள் பெர்சே 3.0 இணைத் தலைவர் அம்பிகாவின் புக்கிட் டாமன்சாரா வீட்டின்முன் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்களில் சிறு கடைகள் போட திட்டமிட்டுள்ளனர்.

கோலாலம்பூர் சிறு கடை வியாபாரிகள் நடவடிக்கை மன்றத்தின் தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் அவர்களின் நடவடிக்கையை “பெர்சே 4.0 – பெர்சே 1,2,3 ஐ சுத்தம் செய்தல்” என்று அழைக்கப்படும் என்றார். இதன் மூலம் ஏப்ரல் 28 இல் நடந்த பெர்சே 3.0 பேரணியால் தங்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்வது அவர்களின் நோக்கமாகும்.

அக்கடைகள் இரு நாள்களிலும் பிற்பகல் மணி 3.30 லிருந்து இரவு மணி 8.00 வரையில் திறந்திருக்கும் என்று அவர் கூறினார். ஒவ்வொரு நாளும் ரிம300 லிருந்து ரிம500 வரையில் அவர்கள் சம்பாதிக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது அவருடன் பெர்காசா மற்றும் மலாய் சட்ட மன்றம் ஆகியவற்றின்  பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

-பெர்னாமா