அம்பிகாவின் வீட்டின்முன் கடைகள் போடுவதை கெராக்கான் கண்டிக்கிறது

எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் பெர்சே இணைத் தலைவர் அம்பிகாவின் வீட்டின்முன் கடைகள் போடும் அவர்களின் திட்டத்தை நிறுத்துமாறு சிறு கடைக்காரர்களை கெராக்கான் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று வெளியிட்ட அறிக்கையில் கெராக்கான் உதவித் தலைவர் மா சியு கியோங் அது குறித்து கவலை தெரிவித்ததுடன் தனிப்பட்டவர்களின் வீடுகள்முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது ” நிறுத்தப்பட வேண்டும் ஏனென்றால் அது மலேசிய பண்பாட்டின் ஓர் அங்கம் அல்ல”, என்று கூறினார்.

“போலீஸ் படைத் துணைத் தலவர் வீட்டின்முன் நடத்தப்படவிருந்த “தோசை எதிர்ப்பு” (கைவிடப்பட்டது) குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நடைமுறை தொடர்ந்தால் நாடு முழுவதிலும் வாரம்தோறும் யாராவது ஒருவரின் வீட்டின்முன் ஆர்ப்பாட்டம் நடக்கலாம்”, என்று மா கூறினார்.

அது போன்ற அனைத்து ஆர்ப்பாட்டங்களும் – ‘அம்பிகாவின் வீட்டின்முன் நடந்த உடற்பயிற்சி மற்றும் பினாங்கு முதல்வர் வீட்டின்முன் நடந்த ஈமச்சடங்கு உட்பட’ – “கண்டிக்கப்பட வேண்டும்” என்றாரவர்.

TAGS: