இந்து முறைப்படி நடக்கும் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் வகையில் குறிப்பாக பெண்களின் நலனை பாதுகாக்கும் வகையில் இந்து திருமண பதிவு சட்டம் 2012 என்ற பெயரில் பங்களாதேஷ் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் தலைமையமைச்சர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டதிற்குப் பின் அமைச்சரவை செயலாளர் முஷரப் ஹுசைன் புயியான் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
திருமண பதிவு இல்லாத பெண்களின் திருமணம் மற்றும் மன முறிவு போன்ற பிரச்னை எழும்போது அவர்கள் ஆதாரம் இன்றி தவிப்பதால் பங்களாதேஷில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே இச்சட்டம் இந்து மத நம்பிக்கை கொண்டுள்ளவர்களின் உரிமையை உறுதிபடுத்தும் வகையில் இது இருக்கும் என அவர் தெரிவித்தார்.