“ஆகவே அந்தப் பேரணியில் பங்கு கொண்டவர்களில் அந்த எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் மட்டும் தான் பிபிஏ என்ற அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மீறினார்கள். அதில் கலந்து கொண்ட மற்ற 249,997 பேரும் மீறவில்லையா ?”
பெர்சே 3.0 குற்றச்சாட்டு மீது அன்வார் விசாரணை கோரினார்
திருஎம்: பிபிஏ என்ற அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மீறியதற்காக அந்த மூவர் மீது மட்டும் ஏன் குற்றம் சாட்ட வேண்டும் ?
ஆகவே அந்தப் பேரணியில் பங்கு கொண்டவர்களில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி, முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் செகுபார்ட் என அழைக்கப்படும் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரி மட்டும் தான் பிபிஏ என்ற அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மீறினார்கள். அதில் கலந்து கொண்ட என்னையும் உட்பட மற்ற 249,997 பேரும் மீறவில்லை என்பதுதான் அர்த்தமா ?
ஏன் அப்படி ? அவர்கள் அந்த எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் என்பதுதான் காரணமா ?
லிம் சொங் லியோங்: பெர்சே 3.0ல் பங்கு கொண்டதற்காக அந்த மூன்று அரசியல்வாதிகள் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது, தேர்வு செய்யப்பட்டு வழக்குத் தொடருவதற்கு ஒப்பாகும். அது உண்மை இல்லை என்றால்அந்தப் பேரணியில் பங்கு கொண்ட மற்ற 250,000 பேர் மீதும் வழக்குப் போட வேண்டும்.
டாத்தாரான் மெர்தேக்காவை ஆக்கிரமிப்பதை தடை செய்யும் உத்தரவை அவர்கள் மீறியதாகச் சொல்வது தவறாகும். அவர்கள் எந்த நேரத்திலும் டாத்தாரானை ஆக்கிரமிக்கவில்லை. என்னைப் பொறுத்த வரையில் அந்தக் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்ற நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு இணையாகும்.
அடையாளம் இல்லாதவன் #11028691: நீதிமன்றம் அவர்களுக்கு 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்க வேண்டும் என பிஎன் விரும்புவதாக எனக்குத் தோன்றுகிறது. அந்த அபராதம் விதிக்கப்பட்டால் அவர்கள் வரும் தேர்தலில் போட்டியிட முடியாது.
அனைவருக்கும் நியாயம்: அம்னோ ‘செக்ஸ் விவகாரங்களை’ எழுப்பியது. அவை பலன் தரவில்லை. ஆகவே அன்வாரும் அஸ்மினும் தேர்தலில் நிற்காமல் செய்வதற்கு வேறு வழியில் அவர்கள் முயற்சி செய்கின்றனர்.
அன்வாரை வெளியேற்றுவதற்கு அவர்கள் கஷ்டப்பட்டு உழைக்கின்றனர். அன்வாரைப் பார்த்து நஜிப் அஞ்சுகிறார் என்பதையே அந்த முழு விவகாரமும் உணர்த்துகிறது.
அன்வார் மீது குற்றம் சாட்டப்பட்டு தேர்தலில் நிற்க அனுமதிக்கப்படவில்லை என்றால் அது அம்னோவுக்கு பிஎன் -னுக்கும் மரண அடியைக் கொடுத்து விடும் என்பதை நஜிப் உணரத் தவறி விட்டார். அன்வார் தேர்தலில் நிற்க அனுமதிக்கப்படவில்லை என்றால் மக்கள் ஆத்திரம் அதிகமாகும். அதனால் அம்னோ/பிஎன் கதை முடிந்தது.
முஷிரோ: அவர்கள் எப்போதும் அன்வாரை வீழ்த்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். அவர்கள் அன்வாரை பற்றி மட்டும்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த மனிதரை வெறுக்கவே அவர்கள் விரும்புகின்றன. ஆனால் அவரை எப்படி சமாளிப்பது என்பதுதான் அவர்களுக்குத் தெரியவில்லை. அவரைச் சிக்க வைப்பதற்கு அவர்கள் எந்த அளவுக்கு சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனரோ அந்த அளவுக்கு அன்வாருடைய செல்வாக்கு கூடும். அவருக்கு அனுதாபிகள் அதிகரிக்கும். அதிகமான வாக்குகளும் கிடைக்கும்.
மைகி: நான் தூய்மையான நியாயமான தேர்தல்களை ஆதரிக்கிறேன். வீடியோ அடிப்படையில் பார்த்தால் அஸ்மின் தடுப்புக்களை உடைக்குமாறு கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்வது தெரிகிறது. என்னைப் பொறுத்த வரையில் அது தவறாகும்.
அதனை அரசாங்கம் ஒரு சாக்காக பயன்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்த பெர்சே பங்கேற்பாளர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளைப் பாய்ச்சியது. அஸ்மின் தண்டிக்கப்பட வேண்டும்.
அதே போன்று சில போலீஸ் அதிகாரிகளும் தங்களது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி பொது மக்களை அடித்த போலீஸ்காரர்கள் மீதும் வழக்குப் போடப்பட வேண்டும்.
ஏபிசோலோம்: சொத்துக்களை நாசப்படுத்துகின்றவர்கள், குழப்பங்களை ஏற்படுத்துகின்றவர்கள், தனியார் குடியிருப்புப் பகுதி ஒன்றில் மாது ஒருவரை அவரது வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டு மிரட்டுகின்றவர்கள் ஆகியோரை சட்டம் ஒன்றும் செய்ய முடியவில்லை.
நியாயமான காரணத்துக்காக பொது இடம் ஒன்றில் கூடிய மற்றவர்களை கைது செய்து வழக்குப் போட அதனால் முடியும்.