உங்கள் கருத்து: எதிர்க்கட்சிகள் வன்முறையில் ஈடுபடும்: மகாதீர் பார்வையற்றவராக இருக்க வேண்டும்

எப்போதும் வன்முறையால் பாதிக்கப்படுவது பக்காத்தானாகவும் வன்முறையில் ஈடுபடுவது அம்னோவாக இருக்கும் வேளையில் பக்காத்தான் வன்முறையில் ஈடுபடும் என அவர் சொல்வதின் அர்த்தம் என்ன?”

டாக்டர் மகாதீர்: பெர்சே ‘வன்முறை’- பக்காத்தான் தேர்தலில் தோல்வி கண்டால் வன்முறையில் இறங்குவதற்கான ஆயத்தம்

கைரோஸ்: யார் உண்மையில் வன்முறையில் ஈடுபடுவது ? இப்போது எதிர்க்கட்சிகளின் செராமாக்களே வன்முறை வழி சீர்குலைக்கப்படுவதை அந்த முன்னாள் பிரதமர் தமது கண்களைத் திறந்து பார்க்க வேண்டும்.

எப்போதும் வன்முறையால் பாதிக்கப்படுவது பக்காத்தானாகவும் வன்முறையில் ஈடுபடுவது  அம்னோவாக இருக்கும் வேளையில் பக்காத்தான் வன்முறையில் ஈடுபடும் என அவர் சொல்வதின் அர்த்தம் என்ன ? அவர் என்ன பார்வையற்றவரா ?

அவர் அபத்தமாகப் பேசுகிறார். அவருக்கு வயதாகி விட்டது. அதனால் யார் பாதிக்கப்பட்டவர், யார் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்பதே அவருக்குத் தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் அந்த முன்னாள் பிரதமர் மீதான நம்பிக்கை எப்போதோ போய் விட்டது.

அவரது ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் குறைகிறது. பெர்க்காசா போன்ற முட்டாள்களே அவரை இன்னும் போற்றுகின்றனர்.

எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அடுத்து அதிகம் இழக்கப் போவது மகாதீர் ஆகும். அதனால் தமது உயிர் வாழ்வுக்காக அந்த முதியவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் கூட பலி கொடுக்க அவர் தயங்க மாட்டார்.

ஏபிசோலோம்: நிச்சயமாக எதிர்க்கட்சிகள் வெற்றி பெறப் போவதில்லை. சாதாரண பெரும்பான்மையைப் பெறுவதற்குக் கூட அவை 80 விழுக்காடு வாக்குகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

ஊடகங்கள் வழியாக அவை தங்கள் வாதங்களை எடுத்துக் கூற முடியாத நிலையில் உள்ளன. அத்துடன் இப்போது அவற்றின் செராமாக்களுக்கும் கூட குண்டர்களால் தொந்தரவு கொடுக்கப்படுகிறது.

இது வரை வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் யார் ? பெர்சே 3.0 ஆதரவாளர்கள் வன்முறையை தொடங்கினார்களா ?

எதிர்க்கட்சிகளும் அரசு சாரா அமைப்புக்களும் நடத்திய கூட்டங்களில்தான் தகராறு மூட்டப்பட்டுள்ளது. பிஎன் நிகழ்வுகளில் அல்ல ஏன் ? ஆகவே யார் வன்முறையைத் தொடங்கினார்கள் ?

ஆளும் கூட்டணி தோல்வி அடையும் சாத்தியம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை மகாதீர் தெரிவிக்கின்றார் என்று நினைக்கிறேன். தேர்தலுக்குப் பின்னர் கலகம் மூண்டால் அதற்கு இப்போது கலகம் செய்கின்றவர்களே காரணமாக இருப்பார்கள்.

அந்த மனிதர் தீய எண்ணம் கொண்டவர். தமது புதல்வியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.  ஆனால் நிச்சயமாக செய்ய மாட்டார்.

ரெத்னம்: 1969ம் ஆண்டு அம்னோ தோல்வி கண்ட போதுதான் வன்முறை மூண்டது. எல்லா நேரத்திலும் எதிர்க்கட்சிகள் தோல்வியைத் தழுவி வந்துள்ளன. ஆனால் வன்முறைகள் இல்லை. இந்த முறை அம்னோ தேர்தலில் வெற்றி பெற எல்லாக் கோணங்களிலும் மோசடியில் ஈடுபடப் போகிறது.

எதிர்க்கட்சிகள் வன்முறையில் ஈடுபடப் போவதாகச் சொல்லி மோசடி மூலம் வெற்றி பெற மகாதீர் ஏற்பாடு செய்கிறார்.

விஜார்ஜ்மை: டாக்டர் மகாதீர் நீங்கள் உங்கள் சதித் திட்டத்தில் தோல்வி கண்டு விட்டீர்கள். நாட்டின் வாக்காளர் பட்டியல் தூய்மையானதாக இல்லை மக்களில் 92 விழுக்காட்டினர் கருதுகின்றனர். ஆகவே பெர்சே கோரிக்கைகள் எந்தத் தாமதமும் இல்லாமால் உடனடியாக அமலாக்கப்பட வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.

அடையாளம் இல்லாதவன்#37634848: டாக்டர் மகாதீர் அரசியல் மூதறிஞரைப் போல் செயல்பட்டு வன்முறையையும் குண்டர்தனத்தையும் முறியடிப்பதற்கு பதில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிறார்.

மக்களையும் எதிர்க்கட்சிகளையும் மிரட்டும் பொருட்டு எதிர்மறையான மனோவியல் முறையை அவர் பயன்படுத்துகிறார். 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றால் வன்முறை மூளும் என அம்னோ/பிஎன் எச்சரிக்கின்றன. டாக்டர் மகாதீர் அறிவித்ததை அவை நிச்சயம் செய்யப் போகின்றன.

பிரதமர் நஜிப் ரசாக்கும் மற்ற அரசாங்கத் தலைவர்களும் டாக்டர் மகாதீருக்கு கூட்டாளிகள் என நான் எண்ணுகிறேன். இல்லை என்றால் அவர்கள் இன்னேரம் குண்டர்தனத்துக்கும் ரௌடித்தனத்துக்கும் முடிவு கட்டியிருப்பர்.

ஹங் துவா: வன்முறைகள் தொடருகின்றன. அதற்கு நிச்சயம் எதிர்க்கட்சிகள் காரணமல்ல. என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் யாரையும் ஏய்க்க முடியாது.

பீரங்கி: அம்னோ குண்டர்களைப் பயன்படுத்தும் இழி நிலைக்குத் தாழ்ந்து விட்டது. ஆகவே தேர்தல் மோசடி என்பது அம்னோவுக்குச் சாதாரண விஷயம். தேர்தல் நடைமுறைகளை ஏன் சீர்திருத்த வேண்டும் என்பதற்கு பெர்சே பல ஆதாரங்களை அளித்துள்ளது.

தூய்மையான நேர்மையான தேர்தல்களை அம்னோ எதிர்க்கிறது. வாக்காளர் பட்டியல் மோசடி, தில்லுமுல்லுகள் ஆகியவற்றை மக்கள் அறிந்து கொள்வர் என அது அஞ்சுகிறது.

பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா மிரட்டப்படுவதும் மெர்லிமாவிலும் லெம்பா பந்தாயிலும் அம்னோ கோமாளிகளும் அடிவருடிகளும் நடத்தும் வன்முறைகளும் பெர்சே-யும் எதிர்க்கட்சிகளும் மக்களைச் சந்திக்க விடாமல் செய்வதற்காகும்.

டாக்: இன்றைய கால கட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் அரசியல் பாணி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதற்கு இணையத்துக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அரசாங்கம் நடத்துகின்ற பிரச்சாரம் போலி நாடகம் என்பது உடனடியாக மெய்பிக்கப்பட்டு விடுகின்றது.

 

 

TAGS: