“மகாதீர் முதியவரும் அல்ல முட்டாளும் அல்ல. அவர் குறிக்கோளுடன் தான் எந்த விஷயத்தையும் எழுதுகிறார். நஜிப் சொல்ல முடியாததை அவர் சொல்கிறார்.”
“எதிர்க்கட்சிகள் ‘வன்முறை’: மகாதீர் பார்வையற்றவராக இருக்க வேண்டும்”
கலா: அவர் எந்த விதமான அரசியல்வாதி ? முன்னாள் பிரதமர் என்ற முறையில் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு வரலாற்றில் இடம் பதிக்கப்பட்டு விட்டது.
நல்லதைச் செய்யாத, திறமையற்ற முறையில் நிர்வாகம் செய்யப்படுகின்ற இந்த நாட்டுக்கு பல தீமைகளை செய்து விட்ட மனிதராக அவர் நினைவு கூறப்படுவார்.
அவருடைய நடவடிக்கைகளை பேரி வெய்ன் இவ்வாறு தமது ஆய்வில் குறிப்பிடுகிறார்: “அரசியலையும் வர்த்தகத்தையும் கலந்ததின் மூலம் மகாதீர் நண்பர்களுக்கு உதவும் போக்கிற்கு ஊக்கமளித்தார். ஆனால் அதனால் ஊழல் நடைமுறைகள் பரவுவதை தடுக்க தவறி விட்டார்.”
“சர்வாதிகாரப் போக்கை கடைப் பிடித்த அவர் பொறுமை குறைந்தவராகவும் இருந்தார். வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என்ற தமது எண்ணத்தை அமலாக்கும் போது எதிரிகளை ஜெயிலில் அடைத்தார். போட்டியாளர்களை நீக்கினார். அரசாங்க அமைப்புக்களை கீழறுப்புச் செய்தார்.”
அடையாளம் இல்லாதவன் #36621091: டாக்டர் மகாதீர் சொல்வதை நாம் அலட்சியம் செய்ய முடியாது. காரணம் முக்கிய பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகளை இன்னும் நம்புகின்றவர்களுக்கு அவரது அறிக்கைகள் வேத வாக்குகள். அவ்வாறு பலர் வெளியில் இருக்கின்றனர்.
இன்னும் மதில் மேல் பூனையாக இருக்கும் வாக்காளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி நிலைத்தன்மைக்காக பிஎன் -னுக்கு வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்தும் வகையில் அவரது அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அவ்வாறு செய்யா விட்டால் குழப்பம் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கின்றனரோ அந்த அளவுக்கு அவர்கள் ரௌடிகளைப் போல நடந்து கொள்வதாக பத்திரிக்கைகளில் பெரிதாக செய்தி போடப்படும்.
மகாதீர் முதியவரும் அல்ல முட்டாளும் அல்ல. அவர் குறிக்கோளுடன் தான் எந்த விஷயத்தையும் எழுதுகிறார். நஜிப் சொல்ல முடியாததை அவர் சொல்கிறார்.
மாற்று ஊடகங்கள் வெளியிடும் செய்திகளைப் படிக்காதவர்கள் பெர்சே 3.0ல் 22,000 பேர் மட்டுமே கலந்து கொண்டனர், அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியே அது, மார்க்ஸிஸ்ட் சக்திகள் சம்பந்தப்பட்டுள்ளன, போலீஸ் அதிகாரிகள் அடிக்கப்பட்டனர் என அதிகாரத்துவ பிஎன் ஊடகங்கள் கூறுவதையே நம்புவார்கள்.
இணைய வசதிகள் இல்லாதவர்களையும் இணையத் தளங்கள் வழங்கும் செய்திகளில் அக்கறை காட்டாதவர்களையும் தங்கள் பக்கம் திருப்புவதற்கு அவை எல்லா வழிகளையும் உபாயங்களையும் பின்பற்றி வருகின்றன.
அடையாளம் இல்லாதவன்_4056: மகாதீர் அவர்களே நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் செராமாக்களில் அம்னோவும் பெர்க்காசாவும் வன்முறைகளை அவிழ்த்து விடுவது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா ? அல்லது அது போன்று ஏதும் தெரியாதது போல நடிக்கின்றீர்களா ?
நீங்கள் எத்தகைய மூத்த அரசியல் மூதறிஞர் ? உங்கள் கருத்துக்கள் ஏன் இப்படித் தாறுமாறாகவும் கோணலாகவும் இருக்கின்றன.
அடையாளம் இல்லாதவன் #55961902: அந்த அரசியல் எஜமானருக்கு என்ன நடக்கிறது, யார் வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள் யார் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியாமல் இல்லை.
மற்றவர்கள் மீது பழி போடுவதில் அவர் மிகவும் வல்லவர். மக்கள் எது நல்லது எது கெட்டது என்பதைப் பகுத்தறிய முடியாதவர்கள் என மகாதீர் நினைக்கின்றார்.
தெக்கி: முறைகேடு என்பது பார்வையற்ற நிலைமை அல்ல. அது தீயது.