நியூட்டனின் புதிருக்கு விடை கண்டுபிடித்து இந்திய மாணவன் சாதனை

புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த ஐசக் நியூட்டன் உருவாக்கிய சமன்பாட்டுக்கு, இந்திய மாணவன் விடை கண்டுபிடித்துள்ளான்.

மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவதை கண்ட விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், புவி ஈர்ப்பு விசை குறித்த விஷயத்தை, உலகுக்கு தெரியப்படுத்தினார். இவர் உருவாக்கிய சில சமன்பாடுகளுக்கான புதிர், 350 ஆண்டுகள் ஆகியும், இன்னும் தீர்க்கப்படவில்லை.

ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவன் ஷவுரியா ரே (வயது 16). தற்போது, இந்த புதிருக்கான விடையை கண்டு பிடித்துள்ளான். ஆறு வயதில், ஷவுரியா, ட்ரெஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு, பள்ளியின் மூலம் சுற்றுலா சென்ற போது, அங்கிருந்த பேராசிரியர்கள், நியூட்டனின் இரண்டு விதிகளுக்கான புதிர் இன்னும் விலகவில்லை என ஷவுரியாவிடம் கூறினர்.

அதை கேட்ட ஷவுரியா, ஏன் இந்த புதிருக்கான விடை கிடைக்கவில்லை என கேட்ட போது, பெரிய கணினி மூலம் தான் இதற்கு விடை காண முடியும் என கூறி அனுப்பி விட்டனர். அப்போது முதல், இதை பற்றி ஆராய்ந்து வந்த ஷவுரியா, தற்போது இதற்கு தீர்வு கண்டு பிடித்துள்ளான்.

TAGS: