எம்ஏசிசி ஐசிஏசி போல் இருந்தால் நம்பலாம்

“உங்களை எவரும் நம்பப் போவதில்லை.பிஎன் தலைவர்கள் சம்பந்தப்பட்ட எத்தனை வழக்குகள் வந்தன-என்ன செய்தீர்கள்?”

 

பிகேஆர்:வேட்பாளர்களை வடிகட்ட உங்கள் உதவி தேவையில்லை

கோப்ஸ்: வேட்பாளர்களாக நியமிக்கப்படுவோரின் பின்னணியை ஆராய உதவ முன்வந்துள்ளது  எம்ஏசிசி(மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம்).எம்ஏசிசி சுதந்திரமாகவும் தொழில்முறைப்படியும் செயல்படுவதை நிரூபித்திருக்க வேண்டும்.அப்படிச் செய்திருந்தால் அதன் உதவி வரவேற்கப்பட்டிருக்கும்.

கடந்த கால நடப்புகளைப் பார்க்கையில் அவர்கள் அம்னோவின் நீட்சியாகத்தானே செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.எத்தனையோ வழக்குகள் எம்ஏசிசியின் நேர்மையைச் சந்தேகிக்க வைக்கின்றன.

தியோ பெங் ஹொக் வழக்கு(அரச விசாரணையில் மூவர் குற்றம் புரிந்ததாக தெரிய வந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை),ஸ்கோர்பியன் ஊழலை விசாரிக்க முனையாதது, ஹாங்காங்கில் சாபா முதலமைச்சருக்கு யுஎஸ்$30மில்லியன் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரம், பேராக்கில்  பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை அவர்கள் பிஎன்னுக்குத் தாவியதும் நின்றுபோனது…..இப்படி எத்தனையோ… சொல்லிக்கொண்டே போகலாம்.

எங்கே போனது எம்ஏசிசி-இன் நேர்மை?அது ஹாங்காங்கின் ஐசிஏசி(சுயேச்சை ஊழல் எதிர்ப்பு ஆணையம்)போல் அல்லவா செயல்பட்டிருக்க வேண்டும்.பழைய ஏசிஏ-க்கும் இதற்கும் பெயரில்தான் வேறுபாடு வேறு எதிலும் இல்லை.

தைலெக்: சரியாக சொன்னீர்கள். எம்ஏசிசியின் வலையில் விழுந்து விடாதீர்கள்.அது நச்சுப் பாம்புகள் குடியிருக்கும் புற்று.வேட்பாளர்கள் பற்றி பக்காத்தான் அவர்களுக்குக் கொடுக்கும் தகவல் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அம்னோவைச் சென்றடையும்.

பெர்ட்டான்: எப்படித்தான் நம்புவது எம்ஏசிசி-யை.அதன்மீது நம்பிக்கை  வர வேண்டுமானால் அதன் உயர் அதிகாரிகள் அனைவரும் நீக்கப்பட்ட வேண்டும்.

எம்ஏசிசி, எதற்காக சம்பளம் பெறுகிறீர்களோ அந்தக் கடமையைச் சரிவரச் செய்யுங்கள். ஊழல் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் கைது செய்து கூண்டில் ஏற்றுங்கள்.அதன் பிறகு மற்றவை பற்றிப் பேசுங்கள்.

ஜனநாயகம்: பார்த்தீர்களா எம்ஏசிசி, உங்களை யாரும் நம்பத் தயாராக இல்லை.பிஎன் தலைவர்கள் சம்பந்தப்பட்ட எத்தனையோ விவகாரங்கள்…வாயே திறக்கவில்லையே நீங்கள்.

பிகேஆர் வியூக இயக்குனர் சொன்னதுபோல், போங்க’…உங்கள் வேலையை ஒழுங்காகச் செய்யுங்கள்.பிஎன்னுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதை நிரூபியுங்கள்.அப்புறம் நம்புகிறோம்.அதுவரை நம்பத் தயாராக இல்லை.

லெம்பா பந்தாய் கலாட்டா:அம்னோ ஆளை ஏன் பிகேஆர் கையும் களவுமாக பிடிக்கவில்லை?

டேடோஸ்: அம்னோவைத் தொட முடியுமா.தொட்டால் என்ன ஆகும்?

கேஜென்: அம்னோ ஆளைப் பிடிப்பதா?பைத்தியம் பிடித்து விட்டதா அவர்களுக்கு? அப்படிச் செய்திருந்தால் பெரிய சண்டையே மூண்டிருக்கும்.அம்னோ ஆள்கள் முரடர்கள் என்பதுதான் தெரிந்த விசயமாயிற்றே.

அம்னோவால்தான் இப்படிப்பட்ட யோசனைகளைச் சொல்ல முடியும்.

லிம் சோங் லியோங்: பக்காத்தான் பொறுமையைக் கைவிட்டு வன்செயலில் இறங்க வேண்டும் என அம்னோ விரும்புகிறது.

அப்போதுதானே அரசாங்க இயந்திரத்தைப் பயன்படுத்தி பக்காத்தானை நசுக்க முடியும்.

2காசுபெறாதவன்: முகம்மட் சஸாலி, ஏனய்யா இப்படி மடத்தனமான பேச்சு.அல்லது ஜோக்கடிக்கிறீர்களா?

அந்த ஆளைப் பிடித்திருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தீர்களா? அப்படி எண்ணிப்பார்க்கும் அளவுக்கு தலையில் ஒன்றுமில்லையோ…

இம்ம்ம்ம்:பிகேஆர் அந்நபரைப் பிடித்திருந்தால் போலீசார் புகுந்து கண்ணீர் புகைக்குண்டுகளை வெடித்து பீரங்கி வண்டிகளிலிருந்து நீரைப்  பீய்ச்சியடித்து பிகேஆர் ஆதரவாளர்களை அடித்து உதைத்திருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

பிகேஆர் ஆதரவாளர்கள்தான் வன்செயலுக்குக் காரணம் என்றும் கூறுவார்கள்.

இன்னொன்றைக் கவனித்தீர்களா, அன்வார் எங்கு சென்றாலும் அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு அவர் வருவது பிடிக்கவில்லை என்று கூறுவதே அம்னோ தலைவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டது. அதுவும், எந்த ஆதாரமுமின்றி அப்படிக் கூறுகிறார்கள்.

பெயரிலி: முகம்மட் சஸாலி, அம்னோ ஆளைப் பிடி என்று சொல்வதன்மூலம் பிகேஆரை வன்செயலில் இறங்கத் தூண்டிவிடுகிறீர்.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீர். அதை விடுத்து மாற்றரசுக் கட்சி செராமாக்கள் நடக்கும் இடங்களுக்கு அருகில் அம்னோ செராமாக்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

 

 

 

TAGS: