உங்கள் கருத்து: “தேர்தலை விரைவில் நடத்த நஜிப்புக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்னை அல்ல.அவருக்குத் தேர்தலை நடத்தும் துணிச்சலே இல்லைபோல் தெரிகிறது.பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை.”
டாக்டர் எம்: நஜிப் பலவீனமாக உள்ளார், தேர்தலைத் தாமதிப்பது நல்லது
பீரங்கி: தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அம்னோ விரைவில் வெளியில் வராதுபோல் தெரிகிறது.டாக்டர் அல்லவா, அதுதான் விசயம் தெரிந்து பேசுகிறார்.
பக்காத்தான் ரக்யாட்டை எதிர்க்கும் நிலையில் அம்னோ இல்லை என்பதை அவர்(டாக்டர் மகாதிர் முகம்மட்) ஒப்புக்கொள்கிறார்.ஆனால் நஜிப், தம் செல்வாக்கு முன் எப்போதுமில்லாத அளவுக்கு கொடிகட்டிப் பறப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
அக்குயினாஸ்: ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவர், தேர்தல் விரைவில் வரப் போகிறது என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்.என் நினைப்பு ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில்தான் தேர்தல் நடக்கும்.
தேர்தலை விரைவில் நடத்த நஜிப்புக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்னை அல்ல.அவருக்குத் தேர்தலை நடத்தும் துணிச்சலே இல்லைபோல் தெரிகிறது.பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை.
ஆனால், அம்னோ உறுப்பினர்கள் பொறுமை இழந்து வருகிறார்கள்.தேர்தலை இப்போதே நடத்த வேண்டும் என்று துடிக்கிறார்கள்.தம்மீதுள்ள அவர்களின் கவனத்தைத் திருப்ப வேண்டும்;அதனால்தான் தேர்தலைத் தாமதித்து நடத்த வேண்டும் என்று மகாதிரைச் சொல்ல வைத்திருக்கிறார் நஜிப்.
தைலெக்: அப்துல்லா அஹமட் படாவியிடமிருந்து ஒரு பலவீனமான பிஎன்னைத்தான் நஜிப் சுவீகரித்துக்கொண்டார் என்று டாக்டர் எம் சொல்வது சுத்த அபத்தம்.
பிஎன்னின் பலவீனமான இணைப்பே நஜிப்தான்.நிதி முறைகேடுகளும் மற்ற ஊழல்களும் அவரது கட்சியை அலைக்கழிக்கின்றன.
1மலேசியா வெறும் பேச்சாகத்தான் இருக்கிறது.செயலில் ஒன்றையும் காணோம்.பெர்காசா, அம்னோ காலாடிக் கும்பல்கள் வெறித்தனமாக நடந்துகொள்கிறார்கள்.பிரதமர் வாய் திறந்து ஒரு வார்த்தை கண்டிக்க மாட்டேன் என்கிறார்.அதனால் சொல்கிறேன், அவர் பலவீனமானவர் என்று.
சா தோம்ஸ்: பிஎன்னை வேண்டுமென்றே பலவீனமாக்கியவர் மகாதிர்தான்.அதைப் பலவீனப்படுத்திய பின்னரே அப்துல்லாவிடம் ஒப்படைத்தார். அப்துல்லா பிஎன்னை வலுப்படுத்த முனைந்ததைக் கண்டதும் பொறுக்கவில்லை.அப்துல்லா செய்ததையெல்லாம் குறை சொல்லத் தொடங்கினார்.
குறைகாண்பவன்: மகாதிர் அவர்களே, அப்துல்லாவிடமிருந்து ஒரு பலவீனமான அரசாங்கத்தை நஜிப் பெற்றார் என்பது தப்பு.
22 ஆண்டுகள் ஆட்சியை விடாமல் பிடித்துக்கொண்டு நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிய உங்களால்தான் மூர்க்கத்தனமும் ஊழலும் திறமையின்மையும் நிறைந்த அரசாங்கம் அவரிடம் வந்து சேர்ந்தது.
சின்னவன்: ஓட்டுனர் இடத்தில் இருந்துகொண்டு எல்லாவற்றையும் ஆட்டுவித்துக் கொண்டிருப்பவர் மகாதிர்தான்.நஜிப், ஒரு பயணிபோலத்தான்.
நான்கு ஐந்து மாதங்களில் பிஎன்னுக்குப் போதுமான ஆதரவைத் தேடிக்கொள்ள நஜிப்பால் முடியும் என்று மகாதிர் நம்புவதுபோல் தெரிகிறது.
அப்படி அவர் நினைத்தால் அது சிறுபிள்ளைத்தனமாகும். அம்னோவின் கோமாளித்தனங்களையும் காலாடித்தனங்களையும் மக்கள் அவ்வளவு விரைவில் மறந்து விடுவார்களா, என்ன?
டேட்டோஸ்: பிஎன் மொத்தமும் தடத் தடவென்று சரிந்து கொண்டிருக்கிறது.அதன் சரிவைத் தடுக்க முடியாது.
ஸ்கோர்பியன் வழக்கும் மாற்றரசுக் கட்சிகளின் செராமாக்களிலும் பெர்சே இணைத் தலைவர் எஸ்.அம்பிகாவுக்கு எதிராகவும் அவரின் கையாள்கள் கலாட்டா செய்வதை அவர் தடுக்க முடியாமல் இருப்பதும் நிலைமையை மேலும் மோசமாக்கும்.
சில்லறை வியாபாரிகளின் இழப்பை ஆதரிக்கும் அவர், பெர்சே 3.0-இல் பொதுமக்களின் அறைகூவலைச் செவிமடுக்க மறுத்தாரே அதுதான் அவரது கதையை முடித்துவைக்கப் போகிறது.