பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீதான விசாரணை தொடர வேண்டும் என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனத்தின் உயர் நிலைக்குழு ஒன்று பரிந்துரை செய்துள்ளது.
அந்த ஊழல் தடுப்பு நிறுவனத்தின் நடவடிக்கை மறு ஆய்வுக் குழுவின் தலைவரான ஹாடெனான் அப்துல் ஜலில் அந்தத் தகவலை இன்று வெளியிட்டார்.
அஸ்மின் அலி தொடர்பான 2009ம் ஆண்டு புலனாய்வு அறிக்கையை மீண்டும் தொடங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
அண்மையில் வெளியான பல கருத்துக்கள் உறுதி செய்வதற்கு கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக அஸ்மின் அலி, பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆகியோருடைய சாட்சியங்கள் தேவைப்பட்டால் ஆணையம் அவர்களை அழைக்கும் என அப்போது அங்கிருந்த எம்ஏசிசி புலனாய்வுப் பிரிவு இயக்குநர் முஸ்தாபார் அலி கூறினார்.