பாகிஸ்தானில் கடும் வெள்ளம்; 218 பேர் பலி!

பாகிஸ்தானில் இந்து மாகாணத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள 23 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மழை வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 218 பேர் உயிரிழந்துள்ளனர்.  400 பேர் காயம் அடைந்துள்ளனர்.

55 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 45இ லட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 17 இலட்சம் ஏக்கரில் இருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த தகவலை பாகிஸ்தான் தேசிய பேரிடர் நிர்வாக தலைவர் டாக்டர் ஷபர் குவாதிர் தெரிவித்துள்ளார்.