“இது போன்ற வியூகத் தன்மை கொண்ட ரகசியங்கள் அம்பலமாகும் போது கடற்படையில் உள்ள சாதாரண வீரர்கள் தங்கள் உயிர்களைக் கொண்டு விலை கொடுக்க வேண்டியிருக்கும்.”
பிரஞ்சுக்காரர்கள் மலேசியக் கடற்படையிடமிருந்து மிகவும் ரகசியமான ஆவணங்களை ‘வாங்கினர்’
சத்து மலேசியன்: மதிப்புமிக்க நமது போலீஸ் படையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி நமது நாட்டை அந்தத் துரோகிகளிடமிருந்தும் காப்பாற்றி அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தும் என நீங்கள் நினைத்தால் அதனை மறந்து விடுங்கள். நிச்சயம் அது போன்று எதுவும் நடக்கப் போவதில்லை.
அது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், எதிர்க்கட்சிகளில் உள்ள மற்றவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டுமே அவை அதனைச் செய்யும். இன்னேரம் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தூக்குமேடைக்கு அனுப்பப்பட்டிருப்பார்கள்.
அதே வேளையில் ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கி ஊழல் தொடர்பான தேசியப் பாதுகாப்பு, அல்தான்துயா ஷாரிபு கொலை ஊழல், என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம், லினாஸ், பெர்சே போராட்டம் ஆகியவை பிஎன்-னுக்காக அவை கொடுக்கும் முன்னுரிமை விஷயங்களாகும்.
ஜயிஸ்/மாய்ஸ் சோதனைகள், கல்வாத், மதமாற்றங்கள், குதப்புணர்ச்சி 1,2,3, அன்வார்/அஸ்மின் மீது தாக்குதல், டத்தோ டி மூவரின் ‘செக்ஸ் ஜோடனைகள்’ லிம் குவான் எங்-கையும் அவரது குடும்பத்தையும் மிரட்டுவது, எதிர்க்கட்சிகளை சிறுமைப்படுத்துவதற்கு அரசியல் தவளைகளை பயன்படுத்துவது (அவை அனைத்தும் முக்கிய நாளேடுகளில் பெரிய செய்தியாகப் போடப்படும்) ஆகியவை மீதே அதன் கவனம் இருக்கும்.
ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்கின்ற அத்துமீறல்கள் அல்லது குற்றங்கள் பற்றி அவை மூச்சுக் கூட விட மாட்டா. உண்மையான விசுவாசி: நாட்டின் மிகவும் ரகசியமான ஆயுதப்படை ஆவணம் விற்கபட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தற்காப்பு அமைச்சு, போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவை எவ்வளவு வேகமாக நடவடிக்கையில் இறங்குகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அரசியல் கட்சிகளும் அரசு சாரா அமைப்புக்களும் அந்த கடுமையான குற்றச்சாட்டுக்களைப் பயன்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது. நாட்டின் கௌரவம் பணயம் வைக்கப்பட்டுள்ளது. அது உண்மை என்றால் தலைகள் உருள வேண்டும்.
ஜேம்ஸ் டீன்: அந்தச் செய்தி நமது உளவுத் துறையின் முகத்தில் விழுந்த அறைக்கு ஒப்பாகும். அது குறித்து இராணுவ வேவுத் துறைக்குத் தெரியுமா என்பதே இப்போது எல்லோருடைய மனத்திலும் எழுகின்ற கேள்வி ஆகும்.
அதற்குப் பதில் ‘ஆம்’ என்றால் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை ?. இல்லை என்றால் அந்தத் துறை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக அர்த்தம்.
லூயிஸ்: பிரதமர் நஜிப் ரசாக் அவர்களே, நீங்கள் அடிக்கடி சொல்வது போல நீங்கள் இந்த நாட்டை நேசித்தால் அந்தத் துரோகியைக் கண்டு பிடித்து ஜெயிலில் அடையுங்கள்.
போர்க் காலத்தில் தற்காப்பு ரகசியங்களை விற்பதற்கு மரண தண்டனை விதிக்கப்படும். அது கடுமையான குற்றம் ஆகும். உங்களுக்கு முன் உள்ள தேர்வு இது தான் – உங்கள் அருமை நண்பர்களா அல்லது பாசத்துக்குரிய நமது மலேசியாவா ?
SIC It: நமது நாட்டின் பாதுகாப்பை தற்காப்பதற்கு நியமிக்கப்பட்டவர்கள் பணத்துக்காக நாட்டின் பாதுகாப்பைஉண்மையில் விற்கின்றனர். அது உண்மையில் பயங்கரமான கடுமையான குற்றமாகும். தேசத் துரோகமும் ஆகும்.
அடையாளம் இல்லாதவன்_3f4a: உள்ளுக்குள் இருப்பவர்களுடைய உதவி இல்லாமல் அந்த ஹாங்காங் நிறுவனத்துக்கு எப்படி அந்த மிகவும் ரகசியமான ஆவணங்கள் கிடைத்திருக்கு முடியும் ?
நமது நாட்டின் பாதுகாப்பு நடைமுறைகள் இவ்வளவு மோசமாகவா இருக்கின்றன ?
டிஸ்வாமி: இது போன்ற வியூகத் தன்மை கொண்ட ரகசியங்கள் அம்பலமாகும் போது கடற்படையில் உள்ள சாதாரண வீரர்கள் தங்கள் உயிர்களைக் கொண்டு விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதே வேளையில் பேராசை பிடித்த துரோகிகள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
அடையாளம் இல்லாதவன்_3e21: இது மட்டும் ஒரே ஒரு சம்பவமாக இருக்காது. இது போன்ற பல சம்பவங்களும் இருக்கலாம்.
பணத்துக்காக சிலர் எதனையும் விற்பார்கள் எனத் தோன்றுகிறது. ஆனால் தற்காப்பு ரகசியங்களை விற்பதை மன்னிக்கவே முடியாது.
நமது நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களே தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயே அக்கறை காட்டினால் நாம் என்ன செய்ய முடியும் ? நமது நலனைக் கவனிக்கும் சுவாராமுக்குக் கோடி நன்றிகள்.
பாப் தியோ: பிரான்ஸில் விரைவில் தொடங்கப் போகும் ஊழல் விவகார வழக்கு ஒன்றில் மிகவும் ஆழமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு பிரதமர், வரும் பொதுத் தேர்தலில் ஆளும் கூட்டணியை வழி நடத்தப் போவதாகக் கூறிக் கொள்வது உண்மையில் மூளையைக் குழப்புகிறது.
ஒரு வேளை அதனால் தான் நஜிப் வெளியேறுவதற்காக 13வது பொதுத் தேர்தல் தாமதமாக நடத்தப்பட வேண்டும் என மகாதீர் விரும்பிறாரோ என்னவோ ?
அதனைத் தொடர்ந்து அம்னோவில் உள்ள தனது ஏஜண்டுகள் மூலம் தேர்தலை வழி நடத்தலாம் என அவர் எண்ணியிருக்கக் கூடும்.
எது எப்படி இருந்தாலும் நஜிப் தேடப்படும் மனிதர் ஆவார். பிஎன் தேர்தலுக்குத் தயாராக இல்லை. அதனால் அது மோசடியில் ஈடுபட வேண்டியுள்ளது.
அது முதலில் அம்பிகாவை வெளியேற்ற வேண்டும். அதனால்தான் அது அம்பிகா வீட்டுக்கு முன்னாள் ‘பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சியை’ செய்ய தனது கோமாளிகளை அனுப்பியது. இதுதான் அம்னோவின் கடைசித் தேர்தல். அது எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அல்லது ஜெயில் இருக்கும்.
பாரிஸில் விரைவில் நஜிப் croissants சாப்பிடப் போகிறார். அதுவே அவருக்கு உள்ள ஆறுதல்.
ஜாடெட்: நமது ஆற்றல் மிக்க, மிகவும் திறமையான எம்ஏசிசி என்ன செய்யப் போகிறது ? தகவல்களைக் கொடுத்தவர்கள் மீதும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் மீதும் வழக்குப் போடுமா ?
தேசத் துரோகத்துக்கு என்ன தண்டனை தெரியுமா ? அது தூக்குத் தண்டனைதானே ?