இசா சட்டம் மற்றும் இதர தடுப்புக்காவல் சட்டங்களுக்கான திருத்தங்கள் குறித்து அரசாங்கம் இன்னும் ஆய்வு செய்து வருகிறது என்று உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுஸ்சேன் இன்று கூறினார்.
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அச்சட்டத்தை அகற்றுவது பற்றி அரசாங்கம் சிந்தித்து வருவதாக கூறப்படும் சமீபகாலச் செய்திகளை அவர் மறுத்தார். அதே வேளை, அப்பிரச்னை குறித்து அரசாங்கத்தின் நிலை என்பது பற்றி மௌனம் காட்டப்படுகிறது.
“முன்பு என்ன கூறப்பட்டது என்பதைக் கவனித்து வருகிறோம். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் கூட வேண்டியுள்ளது. நாம் கிட்டத்தட்ட அங்கு வந்து விட்டோம். அது (முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள்) ஒன்றும் புதியதல்ல”, என்று அவர் தேசிய முன்னாள் போலீஸ் அதிகாரிகள் மன்றத்தின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.