அமைச்சர்கள் தங்கள் குடும்ப விண்ணப்பங்கள் பற்றி அறிவிக்க வேண்டும் என எம்ஏசிசி விரும்புகிறது

அமைச்சர்களுடைய குடும்பங்கள் அரசாங்கக் குத்தகைகள் அல்லது எளிய கடன்களுக்கு விண்ணப்பிக்கும் போது அது குறித்து அமைச்சரவைக்கு அமைச்சர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் விதிமுறை அறிமுகம் செய்யப்பட வேண்டும் என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் தொடர்பில் பொது மக்களிடையே உருவான ஆத்திரத்தைத் தொடர்ந்து ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு அந்த ஆணையம் வகுத்துள்ள ஏழு யோசனைகளில் அதுவும் ஒன்று என ஆணையத்தின் துணை ஆணையரான சுட்டினா சுட்டான் சொன்னார்.

அந்த யோசனையின் கீழ் தங்கள் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட அரசாங்கத் திட்டங்களில் முடிவு எடுக்கும் அமைப்புக்களில் தாங்கள் இடம் பெற்றிருந்தால் தங்களது தொடர்பை அமைச்சர்கள் அறிவித்தால் போதும் .

“அமைச்சர்கள் அவ்வாறு அறிவிப்பதைக் கட்டாயமாக்கும் வகையில் அமைச்சர்களுக்கான நன்னடத்தை விதி முறைகளில் அத்தகையை விதியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என எம்ஏசிசி பரிந்துரை செய்கிறது,” என்றார் அவர்.

என்எப்சி சம்பவம் தொடர்பில் எம்ஏசிசி நான்கு அரசாங்க அமைப்புக்களை ஆய்வு செய்ததாகவும் சுட்டின்னா சொன்னார். நிதி அமைச்சு, விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சு, நெகிரி செம்பிலான் மந்திரி புசார் இணைப்பு நிறுவனம் (Negeri Sembilan Menteri Besar Incorporated), ஆகியவை அவை.

அந்த ஆய்வின் விளைவாக ஏழு பலவீங்கள் அடையாளம் காணப்பட்டு ஏழு யோசனைகள் தயாரிக்கப்பட்டன.

 

TAGS: