அவர்களை ‘வெற்றி’ கொள்ள முடியாவிட்டால் ‘உதையுங்கள்’- அது தான் அம்னோ கலாச்சாரம்

“அரசியல் எதிரிகளையும் சிவில் சமூக அமைப்புக்களையும் அச்சுறுத்துவது அளவுக்கு அதிகமாகச் சென்று விட்டதாக நான் எண்ணுகிறேன். வெறுப்பையூட்டும் அந்த நடவடிக்கை அம்னோ அரசியல் கலாச்சாரமாகி விட்டதாகத் தோன்றுகிறது.”

மோட்டார் சைக்கிளோட்டிகள் அஸ்மின் வீட்டை வலம் வருகின்றனர்

விஜார்ஜ்மை: பக்காத்தான் ராக்யாட் போராளிகளை அடிபணிய வைப்பதற்கு அம்னோ பயன்படுத்தும் புதிய தந்திரம் இது என நான் கருதுகிறேன்.

முதலில் அது சட்ட அமலாக்க அமைப்புக்களைக் கொண்டு அவர்களை அச்சுறுத்தின. மிரட்டின. ஆனால் அவை வேலை செய்யவில்லை.

அந்த அமலாக்க அமைப்புக்களை மக்கள் மிகவும் தாழ்வாக மதிப்பிட்டனர். அவற்றையும் நிராகரித்தனர்.

அதனால் அம்னோ அந்த வேலையைச் செய்வதற்குக் குண்டர்களை ஏவி விடுகிறது.

இது மலேசியா, சிம்பாப்வே அல்ல என்பதை அம்னோ உணர வேண்டும். நாங்கள் அடி பணியப் போவதில்லை.

வேட்டைக்காரன்: அம்னோவே, இத்தகைய அபத்தமான அச்சுறுத்தலால் உனக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது. இதனால் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி பிகேஆர்-ஐ விட்டு விலகி விடுவார் என அம்னோ எதிர்பார்க்கின்றதா ? அல்லது மக்கள் அவரை வெறுக்கத் தொடங்கி விடுவார்களா ? உங்களுக்கு மூளையில் ஏதுவுமே இல்லை.

நசுக்கப்பட்டவர்: போலீசார் உறுதியான நடவடிக்கைகள் எடுக்காத வரையில் இத்தகைய அடாவடித்தனங்கள் தொடருவது திண்ணம். அமைதியை நிலை நிறுத்துவது அரச மலேசியப் போலீஸ் படையின் கடமையாகும்.

ரௌடிகள் எதிர்க்கட்சிகளையும் பெர்சே-ஐயும் மிரட்டும் போது நடவடிக்கை எடுக்கப் போலீஸ் தவறி விட்டது.

பினாங்கில் லினாஸ் எதிர்ப்புக் கூட்டம், ஜோகூரிலும் மெர்லிமாவிலும் நிகழ்ந்த சம்பவங்கள், சில காலத்திற்கு பெல்டா நிலத் திட்டம் ஒன்றில் நுருல் இஸ்ஸா பேசிய கூட்டம், அண்மையில் எஸ் அம்பிகா வீட்டுக்கு முன்பு நிகழ்ந்தது  ஆகியவற்றில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.

அரச மலேசியப் போலீஸ் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் எதற்காக காத்திருக்கிறது ? இது போன்ற அச்சுறுத்தல்களைத் தாங்க முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் பதிலடி கொடுத்த பின்னரா ? அப்புறம் என்ன அவசர காலத்தைப் பிரகடனம் செய்வதற்கு உங்களுக்கு ஒரு காரணம் கிடைத்து விடும்.

மஹிந்தர் சிங்: இது நியாயம் அல்ல. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்கள் எதிரிகளிடம் இது போன்று செய்வதில்லை. நாம் அனைவரும் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு இயங்க வேண்டும்.

இப்போது அது போன்ற நடவடிக்கைகள் வழக்கமாகி விட்டதாகத் தோன்றுகிறது. மக்களுடைய வீடுகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வதும் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்களுடைய குடும்பங்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.

டாங்கிகோங்: அரசியல் எதிரிகளையும் சிவில் சமூக அமைப்புக்களையும் அச்சுறுத்துவது அளவுக்கு அதிகமாகச் சென்று விட்டதாக நான் எண்ணுகிறேன். வெறுப்பையூட்டும் அந்த நடவடிக்கை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமை தாங்கும் அம்னோவின்  அரசியல் கலாச்சாரமாகி விட்டதாகத் தோன்றுகிறது.

அம்னோ தலைவர்கள்  தாங்கள் அவற்றில் நேரடியாக சம்பந்தப்படவில்லை எனக் கூறி அதற்கான பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் யாருடைய பார்வையில் அந்த குண்டர்களும் ரௌடிகளும் கூலிக்கு அமர்த்தப்பட்டு இயங்குகின்றனர்.

எஸ் ஏ டாம்ஸ்: கூட்டங்களைச் சீர்குலைக்கும் அதே அம்னோவில் நீங்களும் ஒரு காலத்தில் இருந்துள்ளீர்கள். ஆகவே அது உங்களைத் திருப்பித் தாக்குகிறது.

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் நீங்கள் அரசில் இருந்த போது உங்களிடம் ஊழல் மலிந்திருந்ததாக கூறப்படுகிறது. அதனால் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அதனை நீங்கள் மீண்டும் செய்ய மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?

சிறுத்தையின் வரிகள் மாறப் போவதில்லை. இப்போது தேவதைகள் போலப் பாசாங்கு செய்யும் நீங்களும் அன்வாரும் ஊழல் வழியில் சேர்த்ததை திருப்பிக் கொடுக்கப் போவதில்லை. உங்களுக்கும் அரசாங்கத்தில் இப்போது உள்ள கழுகுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

குழப்பம் இல்லாதவன்: நிச்சயமாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. அம்னோவும் அதன் ஆதரவாளர்களும் மரணத்தின் விளிம்பில் இருக்கின்றனர். தங்கள் நேரம் முடிந்து விட்டது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். பொறுமையாக இருங்கள் நண்பர்களே, தங்கள் சொந்த தலைவிதியை அவர்களே நிர்ணயம் செய்து கொள்கின்றனர்.

நோய் எதிர்ப்பு: சிறு பிள்ளைகளைப் போல அம்னோவும் பிஎன்-னும் தொடர்ந்து நடந்து கொண்டால் அவை இன்னும் அதிகமான வாக்குகளை இழக்க நேரிடும். புதிய வாக்காளர்கள் கூட ஒடி விடுவர்.

1 டம்னோ: 13வது பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க அவர்கள் பயங்கரக் கனவுகளைக் காண்கின்றனர்.அதனால் விரக்தி அடைந்துள்ளனர்.

உண்மையான குடிமகன்: அம்னோ தோல்வி காண்கிறது என்பதையே அது காட்டுகிறது.

 

TAGS: