ஆர்சிஐ அறிக்கைக்கு முன்னதாக பொதுத்தேர்தல் நடத்தக்கூடாது, சாபா டிஎபி

சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் (ஆர்சிஐ) அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக பொதுத்தேர்தல் நடத்தக்கூடாது என்று பிரதமர் நஜிப்பை சாபா டிஎபி கேட்டுக்கொண்டுள்ளது.

பிஎன் ஆர்சிஐ அமைப்பதற்கான முன்மொழிதலை அதன் தேர்தல் வெற்றிக்கான ஒரு தேர்தல் கருவியாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு இது அவசியாகும் என்று சாபா டிஎபி தலைவர் ஜிம்மி வோங் கூறினார்.

ஆர்சிஐயை அமைப்பதற்கு கடந்த பெப்ரவரி மாதத்தில் அமைச்சரவை தீர்மானித்தது. ஆனால், நஜிப் அது குறித்து இதுவரையில்  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார் என்று அவர் மேலும் கூறினார்.

ஆர்சிஐ ஒரு கடுமையான விவகாரமாக கருதப்பட வேண்டும். ஆகவே, அதன் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு நஜிப் தேர்தலை நடத்தக்கூடாது என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் வோங் கேட்டுக்கொண்டார்.

ஆர்சிஐயின் தலைவராக மனித உரிமை ஆணையத்தின் (சுஹாகாம்) முன்னாள் உறுப்பினர் சிமோன் சிபோன் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு சாபா டிஎபி முழு ஆதரவு அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

 

 

 

 

 

TAGS: