13வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் கலவரத்தில் ஈடுபடப் போவதில்லை என அம்னோ வாக்குறுதி அளிக்குமா ?

“அம்னோ தோல்வி கண்டால் எதுவும் நடக்கும் என்பதை நான் வரலாற்றிலிருந்து அறிந்து கொண்டிருப்பதால் அந்தக் கட்சியின் கோமாளிகள் வன்முறையில் இறங்க மாட்டார்கள் என நஜிப் வாக்குறுதி அளிக்க முடியுமா?”

பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் முயற்சிகளை  அரசாங்கம் முறியடிக்கும் என பிரதமர் சூளுரை

சின்ன அரக்கன்: தங்கள் பிரச்னைகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தும் பொருட்டும் அரசாங்க நிர்வாகத்தில் நிலவும் குளறுபடிகளையும் திறமைக் குறைவையும் சரி செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் பொருட்டும் மக்கள் அமைதியான பேரணிகளுக்கும் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்கின்றனர்.

பேரணிகளும் கூட்டங்களும் அரசாங்கத்திற்கு சாதகமாக இல்லாத வேளையில் மட்டும் அவை பொது ஒழுங்கிற்கு இடையூறாக இருப்பதாக பிரதமர் நினைப்பது முழுக்க முழுக்க அபத்தமானது.

பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா வீட்டுக்கு முன்னால் வியாபாரிகள் கடை போட்டதையும் முன்னாள் இராணுவ வீரர்கள் நடத்திய கேலிக் கூத்தையும் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி வீட்டுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளோட்டிகள் வலம் வந்ததையும் என்னவென்று சொல்வது ? அவை பொது ஒழுங்கைச் சீர்குலைக்கவில்லையா ?

பிஎன் உறுப்பினர்கள் பிகேஆர், பாஸ், டிஏபி செராமா நிகழ்வுகளில் அத்துமீறி நுழைந்து ரௌடிகளைப் போல நடந்து கொள்கின்றனர். அந்த செராமாக்களில் கலந்து கொண்டுள்ள அப்பாவி மக்களுக்கு காயத்தையும் ஏற்படுத்துகின்றனர். அவர்கள் பொது ஒழுங்கை குலைக்க வில்லையா ?

அம்னோ/பிஎன் உறுப்பினர்கள் குண்டர்களைப் போல அலைந்து கொண்டு அமைதியையும் ஐக்கியத்தையும் சீர்குலைப்பதை பிரதமர் ஏற்றுக் கொள்கிறார் என்றும் அவர்களுடைய நடவடிக்கைகள் “பொது ஒழுங்கைச் சீர்குலைக்கவில்லை” என்றும் பிரதமர் கருதுவதாகத் தோன்றுகிறது.

!முடியும்: நஜிப் தாம் சொன்னதையும் நாட்டுக்கு தேவையானதையும் செய்ய விரும்பினால் அவர் பெரும்பான்மை மக்களுக்கு செவி சாய்க்க வேண்டும். அவர் அதனை 13வது பொதுத் தேர்தலில் காண்பார். தேர்தல் முடிவை அவர் மதிக்க வேண்டும்.

பெரும்பான்மை முடிவை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதற்காக பிரார்த்தனையும் செய்கிறோம். அவரும் பிஎன் -னும் வாக்காளர் முடிவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.

நமது நாட்டின் அமைதியைக் குலைப்பதற்கு எந்த தீய நடவடிக்கைகளும் எடுக்கப்படக் கூடாது. நாங்கள் அரசாங்கம் மாறினாலும் கூட மலேசியாவை நேசிக்கிறோம்.

வெறுப்படைந்தவன்: 12வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் அப்துல்லா அகமட் படாவியும் இது போன்று மருட்டல் விடுத்தார். தமக்கு சவால் விடுக்கப்படுவதை விரும்பவில்லை அல்லது “saya pantang di cabar” என மக்களிடம் கூறினார்.

மக்கள் அவருக்கும் அம்னோவுக்கு என்ன செய்தார்கள் என்பதையும் அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பதையும் பாருங்கள். நஜிப் தமக்கு முன்னைய பிரதமரிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை.

13வது பொதுத் தேர்தல் மக்கள் அவருக்கு பாடம் புகட்டிய பின்னரே அவர் புரிந்து கொள்வார். அவர் மக்களை மருட்ட விரும்புகிறார். மக்கள் அவருக்கு நல்ல பாடம் புகட்டுவர்.

மாட் மலேசியா: நஜிப் அவர்களே,  தேர்ந்தெடுக்கப்படாமல் நீண்ட காலத்துக்கு பணியாற்றும் பிரதமர் நீங்கள். ஆகவே தேர்தலை இப்போது நடத்துவதின் மூலம் சரியானதைச் செய்யுங்கள். அடுத்து பெரும்பான்மை  முடிவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

கைரோஸ்: நஜிப் மக்கள் உணர்வுகளை உணரவில்லை. சூழ்நிலையை அவர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இந்த நாட்டில் அமைதியை விரும்பும் விசுவாசமுள்ள பிரஜைகள். நாங்கள் பொது ஒழுங்கை சீர்குலைக்கவில்லை. அரசாங்கத்தை எதிர்க்கவும் இல்லை. நாங்கள் தூய்மையான நியாயமான நேர்மையான தேர்தல்களையே நாடுகிறோம். அதில் என்ன தவறு ?

நியாயமான காரணத்துக்குப் போராடும் மக்கள் ஏன் அரசாங்க எதிர்ப்பாளர்கள் என முத்திரை குத்தப்பட வேண்டும் ?  தூய்மையான நியாயமான நேர்மையான தேர்தல்களை அரசாங்கம் விரும்பவில்லையா ?

இந்த நாட்டில் நீதிக்கும் வெளிப்படையான தன்மைக்கும் போராடும் மக்களை ஏன் ஒடுக்க வேண்டும் ? ஆயுதமில்லாத மக்களை ஏன் கிரிமினல்களைப் போல நடத்த வேண்டும்.

மூன் டைம்: பிரதமரிடமிருந்து எவ்வளவு சிறப்பான அறிக்கை வெளிவந்துள்ளது பார்த்தீர்களா ? இரட்டை வேடம் அந்த மனிதருடைய இயற்கைக் குணமாகும். முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு அந்த  உரையை நிகழ்த்துவதற்கு அவர் பல முறை பயிற்சி எடுத்திருக்க வேண்டும்.

அண்மைய காலமாக பொதுக் கூட்டங்களில் கலவரத்தை ஏற்படுத்துகின்றவர்கள் யார் ?

பக்காத்தான் ராக்யாட் தேர்தலில் தோல்வி கண்டால் வன்செயலில் இறங்கும் என நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். என்ன அபத்தம்!

பக்காத்தான் பல முறை தோல்வி கண்டுள்ளது. என்றாலும் அது மீண்டும் எழுந்து அடுத்த நாள் போராடுகிறது.

உங்கள் கட்சியே எல்லாவற்றையும் இழக்கப் போகிறது. அது வன்முறையில் கோமாளித்தனத்தில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது.

அம்னோ தோல்வி கண்டால் எதுவும் நடக்கும் என்பதை நான் வரலாற்றிலிருந்து அறிந்து கொண்டிருப்பதால் அந்தக் கட்சியின் கோமாளிகள் வன்முறையில் இறங்க மாட்டார்கள் என நஜிப் வாக்குறுதி அளிக்க முடியுமா ?

மலேசியர்களாகிய நாங்கள் அமைதியை விரும்புகிறோம். இது போன்ற அச்சுறுத்தல்களை நாங்கள் கண்டிக்கிறோம்.

அன்புள்ள பிரதமர் அவர்களே, பொதுத் தேர்தலில் உங்கள் கட்சி தோல்வி கண்டால் (அதற்கான சாத்தியம் நிறைய உள்ளது) உங்கள் கட்சிக் கோமாளிகள் வன்முறையில் இறங்க மாட்டார்கள் என்பதற்கு நீங்கள் எங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

 

TAGS: