அம்னோ பணமும் உணவும் கொடுக்கிறது, பாஸ் நம்பிக்கையைக் கொடுக்கிறது

“துணைப் பிரதமர் அவர்களே நீங்கள் சொல்வது போல அம்னோ நல்ல நிலையில் இருந்தால் தேர்தலை இப்போதே நடத்துங்கள். புத்ராஜெயா வீழ்ச்சி காண்பதை காணுங்கள்.”

கெடா பாஸ் பேரணியில் பங்கு கொண்டவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார் முஹைடின்

சுதந்திரமான நியாயமான தேர்தல்: எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது- அண்மையில் அம்னோ கூட்டத்தைக் கவர கொரிய நாட்டு இளம் பாடகிகளை கொண்டு வந்தது. அது மட்டுமல்ல. இலவசமாக உணவும் அன்பளிப்புக்களும் கூட வழங்கப்பட்டன.

துணைப் பிரதமர் அவர்களே நீங்கள் சொல்வது போல அம்னோ நல்ல நிலையில் இருந்தால் தேர்தலை இப்போதே நடத்துங்கள். புத்ராஜெயா வீழ்ச்சி காண்பதை காணுங்கள்.

முஷிரோ: ஆகவே கெடாவில் பாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டவர் எண்ணிக்கை மகத்தானது என்பதையும் அது வலிமையைக் காட்டும் நடவடிக்கை என்பதையும் துணைப் பிரதமர் ஒப்புக் கொள்கிறார். அவருடைய அந்த இரண்டு கருத்துக்களும் சரியானவையே.

என்றாலும் அந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறி தம்மையும் அம்னோவையும் தேற்றிக் கொள்ள முஹைடின் முயலுகிறார்.

தங்கள் ஆதரவாளர்களுக்கு பணமும் போக்குவரத்து வசதிகளையும் கொடுக்கும் ஆற்றல் பாஸ் கட்சியிடம் இருந்தால் அந்த இஸ்லாமியக் கட்சி இது பெரிய சாதனை என்றே நான் கருதுவேன்.

பாஸ் இன்னொரு பேரணிக்கு இப்போது ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த முறை முஹைடினுக்கு உணர்வூட்ட ஜோகூரில் நடத்த வேண்டும்.

கொம்பாஸ்: அரசு ஊழியர்கள் நடப்பு அரசாங்கத்திற்குச் சேவையாற்றுகின்றனரே தவிர ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ளாத துணைப் பிரதமரை நாம் பெற்றிருப்பது உண்மையில் அச்சத்தைத் தருகிறது. வெட்கத்தையும் அளிக்கிறது.

எல்லா அரசாங்க வளங்களும் பிஎன்-ன்னுக்கு சேவை செய்ய பயன்படுத்தப்படுவதில் எந்த வியப்பும் இல்லை.

அர்ச்சன்: பெர்சே 3.0 பேரணியில் கலந்து கொள்ள எனக்கு யாரும் பணம் கொடுக்கவில்லை. என்றாலும் சொந்தப் பணத்தைச் செலவு செய்து கொண்டு நகரத்திற்குள் சென்று கண்ணீர் புகையையும் இரசாயனம் கலந்த தண்ணீரையும் தாங்கிக் கொண்டது எனக்கு நிறைவாக இருக்கிறது.

அதற்காக நான் ஒரு நாள் முழுவதையும் செலவு செய்தேன். நான் வீட்டில் இருந்து கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். அம்னோ பஸ்களையும் இலவசமாக உணவையும் பணத்தையும் கொடுக்க வேண்டும் என்பதால் எல்லோரும் அம்னோ பங்கேற்பாளர்களைப் போன்றவர்கள் எனக் கருதக் கூடாது.

இது போன்ற கோமாளித்தனமான அறிக்கையை நான் துணைப் பிரதமரிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் அது எனக்கு வியப்பைத் தரவில்லை.

சவால்: முஹைடின் அவர்களே, “உங்கள் தரத்தை வைத்து மற்றவர்களை எடை போட வேண்டாம்” என்ற முதுமொழியை நீங்கள் கேள்விப்பட்டது இல்லையா ?

கெனியோ: நான் சில பக்காத்தான் செராமாக்களில் கலந்து கொண்டுள்ளேன். போக்குவத்துக்கும் உணவுக்கும்  சுவைபானங்களுக்கு நான் தான் செலவு செய்தேன். அதற்கும் மேலாக அவற்றின் நிதி திரட்டும் நடவடிக்கைகளுக்கு நன்கொடையும் அளித்துள்ளேன்.

பிஎன் தனது கூட்டங்களில் மக்கள் கலந்து கொள்ள பணத்தையும் உணவையும் கொடுப்பதுடன் அதிர்ஷ்ட குலுக்குகளையும் நடத்த வேண்டியுள்ளது. நாட்டியக்காரிகளையும் வரவழைக்க வேண்டியுள்ளது. நானும் பிஎன் செராமாக்களில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் பக்காத்தானுக்குத் தான் வாக்களிப்பேன்.

ரூபன்: கண்ணாடி வீட்டுக்குள் வாழ்கின்றவர்கள் கல்லை எறியக் கூடாது.

ABBN: முஹைடின் அவர்களே நீங்கள் சொல்வது தவறு. பாஸ் கட்சிக்கும் பக்காத்தானுக்குமான மக்கள் ஆதரவு  குறிப்பாக சீனர்கள், இந்தியர்களிடையே கடந்த தேர்தலுக்குப் பின்னர் இரு மடங்கு கூடியுள்ளது.

வேட்டைக்காரன்: எந்த விதமான இலவசமும் பணமும் இல்லாமல் மலாய்க்காரர்கள் பாஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதைக் கண்டு அம்னோ தலைவர்களுக்கு பொறாமை ஏற்பட்டிருக்க வேண்டும்.

“கலந்து கொள்வதத்கு பணம் கொடுக்கும்” பண்பாடு அம்னோவில் ஊறிப் போய் விட்டது. அதனால் பணம் கொடுக்காவிட்டால் யாரும் அதன் நிகழ்வுகளுக்குப் போக மாட்டார்கள்.

அதாவது சீனாவில் சவ அடக்கச் சடங்குகளில் கலந்து கொள்கின்ற “தொழில் ரீதியாக இயங்கும் துக்கம் அனுசரிப்பவர்களுக்கு” பணம் கொடுப்பதைப் போல.

TAGS: