கட்டடத்தின் மீது விமானம் மோதி வெடித்துச் சிதறியது; 153 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கட்டடத்தின் மீது விமானம் மோதி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த சுமார் 153 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நைஜீரியாவிலுள்ள பெரிய நகரான லாகோஸில் ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது.

டானா ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் லாகோஸில் இருந்து தலைநகர் அபுஜாவுக்கு புறப்பட்டுச் சென்றபோது விமான நிலையத்துக்கு அருகிலுள்ள கட்டடத்தில் மோதியதாகத் தெரிகிறது.

தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட மீட்புக் குழுவினர் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தனர்.

விமானத்தில் பயணம் செய்த யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று நைஜீரிய விமானப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ஹரால்டு டேனுரன் கூறினார்.