பாஸ் கூட்டத்தைக் கண்டு பயந்துபோனார் மகாதிர்

“மகாதிர் அவர்களே,டிட்டி காஜாவில் எத்தனையோ ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறீர்கள், இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்ததுண்டா?”

 

பாஸ் வாடகைக்கு அமர்த்திய கூட்டம் என்று டாக்டர் எம் கிண்டல்

தொலு: பாஸ்,அதன் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் வாடகைக்கு அமர்த்த வேண்டிய அவசியமில்லை.அதே வேளை டிஏபி, பிகேஆர் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் சுய விருப்புடன்தான் கூட்டத்துக்குச் சென்றிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அப்படியே, அகூட்டத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்கள் இருந்தார்களென்றால் அவர்கள் ஆளும் கட்சி ஆள்களாகத்தான் இருக்க வேண்டும்.ஆளும் கட்சி ஆள்களே அக்கூட்டத்துக்குச் சென்றார்கள் என்றால் பக்காத்தான் ரக்யாட்டுக்கு அது நல்ல செய்திதான்.

ரூபன்: அலோர் ஸ்டாரில் திரண்ட அம்மாபெரும் உண்மையான கூட்டம் என்பது மகாதிருக்குத் தெரியும்.

என்ன, தம் சொந்த மாநிலம் மாற்றுக்கட்சியிடம் இருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.காலாவதியான தம்மைப்போல் அல்லாமல் தோக் குரு நிக் அசீஸ் நிக் மாட் மக்களால் உயர்வாக மதிக்கப்படுவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அபாசிர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், “வாடகைக் கூட்டம்” என்று கூறியதன்மூலம், அவரது சொந்த மாநிலத்தில் ஒன்றுதிரண்ட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை  அவமதித்து விட்டார்.

இந்த வெட்கம்கெட்ட மனிதர்தான்  முஸ்லிம்களின் ஒருமைப்பாடு பற்றிப் பேசுகிறார்.

ஏனென்று யோசிப்பவன்:அம்னோ சார்பில் அசிங்கமான வேலைகளை எல்லாம் செய்து வருகிறார் மகாதிர்.

பெர்ட்டான்: “பேரறிஞர்களின் நினைப்பு” ஒரே மாதிரியாக இருக்குமாம். முன்பு, துணைப்பிரதமர் சொன்னார், இப்போது மகாதிரும் அதையே சொல்கிறார்.

அம்னோ உயர் தலைவர்களின் பேச்செல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதைப் பார்த்தீர்களா.

இந்தப் பேச்சுக்களைப் பார்க்கும்போது தேர்தலில் பக்காத்தானுக்கு எதிரான போராட்டத்தில் மகாதிர் அதிகாரப்பூர்மற்ற வகையில் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது.

பொறுப்பைத் தம் குருவான மகாதிரிடம் ஒப்படைத்துவிட்டு நஜிப் பின்னணிக்குச் சென்றுவிட்டார்.

காலூய்64:பெரும்பாலான பாஸ் ஆதரவாளர்கள் பழைய கார்களில் வந்தனர். முக்கிய சாலைகளும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைகளின் சாலைக்கட்டண சாவடிகளும் அவர்களின் வாகனங்களால் நிறைந்திருந்தன.

இந்த ஆதரவாளர்கள் அங்காடிக்கடைகளில் உணவு உண்டனர், தொழுகை இல்லங்களில் குளித்தார்கள், தொழுகை நடத்தினார்கள், கார்களில் அல்லது திறந்த வெளிகளில் படுத்துறங்கினர்-எல்லாவற்றையும் சுய விருப்பதுடன் செய்தார்கள்.

நகர் முழுக்க அவர்களின் வாகனங்கள்தாம்.எல்லா இடங்களிலும் குறிப்பாக அரங்கம் செல்லும் வழி நெடுகிலும் போக்குவரத்து நெரிசல்.

மகாதிர் அவர்களே,டிட்டி காஜாவில் எத்தனையோ ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறீர்கள், இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்ததுண்டா?

22ஆண்டுகள் பிரதமராக இருந்தீர்களே, ஸ்டேடியம் டாருல்அமானில் இவ்வளவு பெரிய கூட்டத்தை உங்களால் திரட்ட முடிந்தா?

விழிப்பானவன்: மகாதிர்,நீங்கள் கூட்டத்தை வாடகைக்கு அமர்த்தியிருக்கலாம்.அதற்காக, மற்றவர்களும் அதையேத்தான் செய்வார்கள் என்று நினைக்காதீர்கள்.

சுதந்திரமான, நியாயமான தேர்தல்:அம்னோ, அதன் கூட்டத்துக்கு வந்தோருக்குத் தின்பொருள் அடங்கிய பைகளை வழங்கும். பாஸ், கட்சிக்கு நிதிதிரட்ட அவர்கள்முன் உண்டியலை நீட்டும்.

எனக்கு எப்படித் தெரியும்? அவர்களின் கூட்டத்துக்குச் சென்றது உண்டு.மனம் விரும்பிக் கொடுத்ததுமுண்டு.

குயினி: அவ்வளவு பெரிய கூட்டம் உங்களுக்கு மலைப்பைத் தந்துவிட்டது.நன்றாக, வயிறு எரியட்டும்.உங்கள் அம்னோ கூட்டத்தைப்போல் அது வாடகைக்கு அமர்த்தப்பட்ட கூட்டம் அல்ல.

 

 

TAGS: