ஸ்கார்ப்பியோன் விவகாரம் மீது கருத்துரைக்க துணைப் பிரதமர் மறுப்பு

மலேசியா ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிகளைக் கொள்முதல் செய்தது மீது நடத்தப்படும் பிரஞ்சு விசாரணை பற்றிய கேள்விகளுக்கு பதில் கூறுவதற்கு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் மீண்டும் மறுத்துள்ளார்.

மலேசியக் கடற்படை ஆவணங்கள் விற்கப்பட்டதாக பிரஞ்சு வழக்குரைஞர்கள் கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என நிருபர்கள் வினவிய போது முஹைடின் உடனடியாக “எந்தக் கருத்தும் இல்லை” எனச் சொன்னார்.

அந்த விவகாரம் பிரதமரும் அப்போதைய தற்காப்பு அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக் மீது குற்றம் சாட்டப்படக்கூடிய சாத்தியதைக் கொண்டிருந்த போதிலும் அரசாங்கம் தொடர்ந்து மௌனமாக இருக்குமா எனக் கேட்கப்பட்ட போதும் அவர் அதே மாதிரி “எந்தக் கருத்தும் இல்லை” என்றார்.

 

TAGS: