உண்மையில் மலாய் முஸ்லிம்கள் யாருக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் ?

“மக்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு பொதுவான போராட்டத்துக்குக் கை கோர்த்துக் கொள்ளும் போது தான் உண்மையிலேயே மலேசியா விடுதலை பெற்றதாகக் கருதப்படும்.”

துணைப் பிரதமர்: இந்த நாட்டின் எதிர்காலம் மலாய்-முஸ்லிம் ஒற்றுமையைச் சார்ந்துள்ளது

ஜேம்ஸ்1067: அவர்களைப் பொறுத்த வரையில் நாட்டின் நிலைக்களன்களான நீதித் துறை, போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், அரசாங்கத் துறைகள் நிலை குலைந்தாலும் பரவாயில்லை.

கருவூலத்தைக் காலி செய்வதோ வாக்குகளுக்காக நூறாயிரக்கணக்கான அந்நியர்களுக்குக் குடியுரிமை வழங்குவதோ அவர்களுக்கு முக்கியமல்ல. அந்நியர்களுக்கு நமது தற்காப்பு ரகசியங்களை விற்பது பற்றியும் கவலை இல்லை.

இனங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி இந்த நாட்டை வீழ்த்துவதும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. மலாய்க்காரர்களிடையே ஐக்கியம் சீர்குலைந்துள்ளதுதான் அவர்களுக்கு மிக முக்கியம்.

இந்த நாட்டில் ஒற்றுமைக்கு மிக முக்கியமான அம்சங்கள் மக்களுடைய வாழ்வாதார விஷயங்கள் என்பதை எப்போது தான் அந்தத் தலைவர்கள் உணருவார்களோ ?

கருவூலம் காலியாக இருக்கும் போது போதுமான பணம் இருக்காது. அதனால் மக்களை ஒன்றுபடுத்துவதற்குத் தேவையான வேலைகளும் உணவுப் பொருளும் கிடைக்காது. மக்களை முட்டாள்களாக எண்ணுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். காரணம் அவர்களில் பெரும்பாலோர் வாழ்க்கையின் உண்மை நிலைகளை உணர்ந்து கொண்டு விட்டனர்.

பீரங்கி: சீன சமூகத்தையும் கிறிஸ்துவ சமூகத்தையும் பூச்சாண்டி காட்டி மலாய்க்காரர்களிடையே அச்சத்தை ஊட்டுவதும் இன, சமய விவகாரங்களைப் பயன்படுத்துவதும் அம்னோவை மலாய்க்காரர்கள் ஆதரிக்க வழிகோலும் என்ற தந்திரங்கள் எல்லாம் இனிமேல் வேலை செய்யாது.

அம்னோவின் ஏமாற்று வேலைகளை மலாய்க்காரர்களும் மலாய்க்காரர் அல்லாதாரும் நன்கு அறிந்து விட்டனர். ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற அடித்தளத்தில் பொதுவான இலட்சியத்தைப் பகிர்ந்து கொள்கின்றவர்களாக அனைத்து மலேசியர்களையும் நடத்தும் மாற்று அரசாங்கத்துக்காக அம்னோ/பிஎன்-னை மலேசியர்கள் நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இன அடிப்படையிலான அரசியல், அந்தந்த  இனங்களைச் சார்ந்த அதிகார வர்க்கத்துக்கு மட்டுமே உதவுகின்றது என்பதை மலேசியர்கள் புரிந்து கொண்டு விட்டனர்.  
தேசிய ஒற்றுமைக்கு தடைக்கல்லாக இருப்பது அம்னோவே.

பால் வாரென்: மலாய்/முஸ்லிம் ஒற்றுமை எதற்குத் தேவை என்பதை விளக்குங்கள். அவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எதற்காக ஒன்றுபட வேண்டும் ?

வளமான நாட்டுக்கா ? எல்லா மலேசியர்களும் ஒற்றுமையாக இருந்தால் அதனை எளிதாக அடையலாமே ? வெளி மருட்டலுக்கா ? எல்லா மலேசியர்கள் ஒன்றுபட்டால் அதனை முறியடிக்க முடியுமே ?

‘மக்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு பொதுவான போராட்டத்துக்குக் கை கோர்த்துக் கொள்ளும் போது தான் உண்மையிலேயே மலேசியா விடுதலை பெற்றதாகக் கருதப்படும்’

விகேன்: ஒரே ஒரு இனத்தின் ஐக்கியத்தை மட்டும் வலியுறுத்துகின்ற துணைப் பிரதமர் ஒருவர் எப்படி நாட்டின் எதிர்காலத் தலைவராக முடியும் ?

அவரது கண்ணோட்டத்தைப் போல மலாய் முஸ்லிகள் ஒற்றுமையால் மட்டும் இந்த நாடு உண்மையான ஐக்கிய நாடாக திகழ முடியாது. அம்னோ அம்னோவைக் காட்டிலும் பரந்த சிந்தனைகளைக் கொண்டுள்ளது. இஸ்லாமியப் பண்புகளில் நியாயமாக நடந்து கொள்கிறது. எல்லா முஸ்லிம்களும் அதன் கீழ் ஒன்றுபட வேண்டும்.

அது இனப் பிரச்னைகளைப் பயன்படுத்துவதில்லை. வறுமை ஒழிப்பு, நல்ல கல்வி, பொறுப்புணர்வு, தகுதி, சமநிலை, நியாயம் ஆகிய தேசியப் பிரச்னைகள் பற்றிக் கவலை கொள்கிறது. அம்னோ அதற்கு ஈடாகவே முடியாது.

TAGS: