அந்நிய நாடுகளில் அம்னோ நடவடிக்கைகள் பதுங்குவதற்காக வீடு திரும்புகின்றன

பிஎன் வீழ்ச்சி அடையும் போது நாட்டுக்கு வெளியில் பாதுகாப்பாக இருக்க இயலும் என அவர்கள்கருதினர். ஆனால் அவர்களது சட்டவிரோத நடவடிக்கைகள் எங்கு சென்றாலும் அவர்களைத் தொடரும் எனத் தோன்றுகிறது

முதலில் பிரஞ்சு நீர்மூழ்கிகள் இப்போது ஆஸ்திரேலிய வங்கி நோட்டுக்கள்

வேட்டைக்காரன்: அவர்களுடைய பேராசை மலேசியக் கடற்கரைகளையும் தாண்டிச் சென்றது. அவர்கள் தங்கள் பணத்தை சட்டப்பூர்வமாக்கினர். அதுவே அவர்களுடைய வீழ்ச்சிக்கு வழி வகுக்கப் போகிறது.

சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் சேர்த்த செல்வத்தை அவர்கள் மலேசியாவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், பாங்க் நெகாரா, போலீஸ் ஆகியவற்றின் துணையுடன் மறைத்து விடலாம். ஆனால் ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர்களுடைய கள்ளத்தனங்கள், புள்ளிகள்இணைக்கப்பட்டதும் அம்பலமாகி விடும்.

பிஎன் வீழ்ச்சி அடையும் போது நாட்டுக்கு வெளியில் பாதுகாப்பாக இருக்க இயலும் என அவர்கள் கருதினர். ஆனால் அவர்களது சட்டவிரோத நடவடிக்கைகள் எங்கு சென்றாலும் அவர்களைத் தொடரும் எனத் தோன்றுகிறது. விரைவில் நீதி வழங்கப்பட்டு விடும்.

ஏபிபிஎன்: மலேசியாவில் அரசியல் சுனாமி ஏற்பட்ட நான்கு ஆண்டுகளிலேயே பல ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. உண்மையில் அவற்றை விழுங்கவே முடியவில்லை.

அந்த விஷயங்கள் பெரிய பனிப்பாறையின் நுனி என்றே நான் எண்ணுகிறே. கால ஒட்டத்தில் இன்னும் அதிகமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும். பல முன்னாள் இன்னாள் பிஎன் அரசியல்வாதிகள் தாங்கள் சூறையாடிய செல்வத்துடன் மலேசியாவுக்கு விடை கொடுத்து வெளியேறப் போகிறார்கள். அதனால் நமக்கு பாழடைந்த இடிந்து போன நாடே கிடைக்கப் போகிறது.

எது எப்படி இருந்தாலும் ஒரு காலத்தில் அற்புதமாக இருந்த இந்த நாட்டு மக்கள் விழித்துக் கொண்டு ஒன்றுபட்டு மாற்றத்தைக் கோர வேண்டும். மோசமான நிலையை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். அத்துடன் ஏற்பட்ட சேதத்ததை சரி செய்யவும் வேண்டும்.

தாய்கோதாய்: அந்த வங்கி நோட்டு ஊழலை அம்பலப்படுத்தியவர் சுயேச்சை செனட்டரான நிக் செனபோன் ஆவார். தொழிலாளர் கட்சியும் மற்ற கட்சிகளும் பின் வாங்கி வேறு வழியில் பார்த்த போது செனபோன் மட்டுமே அந்த விஷயத்தை விடாமல் ஆய்வு செய்தார்.

கோலாலம்பூரில் பெர்சே 3.0 பேரணி நடைபெற்ற போது இரசாயனம் கலந்த நீர் தெளிக்கப்பட்ட அதே செனபோன் தான் அவர்.

அடையாளம் இல்லாதவன்007: உங்களுடைய பிளாஸ்டிக் வங்கி நோட்டுக்கள் தண்ணீரில்  நனைந்தால் ஏன் சாயம் போகிறது என்பதும் அவற்றை கிழிக்க முடியும் என்பதும் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். லஞ்சம் கொடுக்கப்படும் போது பொருள் தரம் வீழ்ச்சி அடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தக் காலத்தில் எதுவும் இலவசமில்லை.

ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்: மதுபானங்கள் மீதும் சிகரட்டுக்கள் மீதும் சிட்டைகளை ஒட்டுவதால் அவற்றின் மதிப்பு எந்த வகையில் கூடுகிறது என யாராவது எனக்குச் சொல்ல முடியுமா ? அதே போன்று தான் நமது மருந்துகளில் ஒட்டப்படும் hologram சிட்டைகளும்.

எந்த உழைப்பும் இல்லாமல் மக்கள் மீது திணிக்கப்படும் வரி என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. யார் அந்த சிட்டைகளை அச்சிட முடியாது ? ஒவ்வொரு சிட்டையின் விலை என்ன ? யாரோ ஒருவர் எந்த உழைப்பும் இல்லாமல் பொருட்களின் மதிப்பைக் கூட்டாமலும் பணம் சம்பாதிக்கின்றனர். நாம் அதற்கு பணம் கொடுக்கிறோம்.

20121221பேரழிவு: அந்த எல்லா ஊழல் நடவடிக்கைகளும் முறைகேடான செயல்களும் கசிவுகளும் நிறுத்தப்பட்டால் பெட்ரோல் விலைகளைக் குறைப்பதற்கும் டோல் கட்டணங்களை ரத்துச் செய்வதற்கும் இலவசமாகக் கல்வியை வழங்குவதற்கும் சமூக நலத் திட்டங்களை கூடுதலாக அமலாக்குவதற்கும் அரசாங்கத்திடம் போதுமான பணம் இருக்கும். அதனைத் தொடர்ந்து உலகில் வளமான நாடுகளில் ஒன்றாக மலேசியா திகழும்.

அப்டூயூ: முழு நிர்வாக முறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக ஊழல் புறையோடி விட்டது. ஒவ்வொரு பேரத்திலும் வலுவான தலைவரும் வலுவான தரகரும் ஏதாவது கையூட்டை எதிர்பார்க்கும் அளவுக்கு அது மோசமடைந்துள்ளது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அதனால் நன்மை அடைகின்றனர் என்பதே கசப்பான உண்மையாகும்.

 

TAGS: