இராணுவ ரகசியங்களை விற்பது ‘முக்கியமில்லையா’ ?

“முக்கியமான விஷயங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியாது என்றால் அது எதற்காக இயங்குகிறது ? பிறகு ஏன் கவலைப்பட வேண்டும் ? சாலைகளுக்குச் செல்வதே நல்லது”

தற்காப்பு ரகசியங்கள் விற்கப்பட்டது மீதான அவசரத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

லூயிஸ்: நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒரு தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய அளவுக்கு முக்கியமில்லையா ? அப்படி என்றால் எது தான் முக்கியம் ?

நமது படை வீரர்களுக்கு எந்தத் தீங்கும் நேராமல் பார்த்துக் கொள்வது நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய பொறுப்பாகும். இப்போது கடற்படை ரகசியம் விற்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனைச் செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும்.

அரசியல் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நேரம் அல்ல இது. நாட்டுக்கும் தலைமைத் தளபதியான மாமன்னருக்குமே நீங்கள் விசுவாசம் காட்ட வேண்டும்.

ஒடின்: அத்தகைய ஆவணங்களை விற்பதே தேசத் துரோகமாகும். அந்த அவசரத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது, அந்த விஷயத்துக்கு சபாநாயகர் கொஞ்சம் கூட முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை அது காட்டுகிறது.

சேரிப் பையன்: அந்த அவசரத் தீர்மானத்தை எந்த அடிப்படையில் சபாநாயகர் நிராகரித்தார் என அவரைக் கேட்பது தான் அடுத்த கட்டமாகும்.

அவரது பதிலைப் பொறுத்து எதிர்க்கட்சிகள் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும்.

அந்தத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் அவமானத்தைத் தருகின்ற அந்தத் தேசத் துரோக நடவடிக்கை பற்றி மக்கள் அதிகம் தெரிந்து கொண்டிருக்க முடியும். அந்த வாய்ப்பு இழக்கப்பட்டு விட்டது.

எல்லாம் குப்பை: எதிர்க்கட்சிகள் எந்த முக்கியமான விஷயத்தை எழுப்பினாலும் சபாநாயகர் அதனை நிச்சயமாக நிராகரித்து விடுகிறார்.

முக்கியமான விஷயங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியாது என்றால் அது எதற்காக இயங்குகிறது ? பிறகு ஏன் கவலைப்பட வேண்டும் ? சாலைகளுக்குச் செல்வதே நல்லது.

கண்டபிரிஹியான்: பிஎன் வாக்காளர்களே நீங்கள் விரும்புவது தான் என்ன ? உங்கள் நாடு அதிக விலைக்கு ஏலம் கேட்கின்றவரிடம் விற்கப்படுவதையா ?
 
பிஎன் உண்மையில் உங்கள் எதிர்காலத்திலும் உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திலும் விளையாடுவதை நீங்கள் உணரவில்லையா ?  உங்களிடம் கொஞ்சம் கூட விசுவாசம் இல்லையா ?

TAGS: