பிரஞ்சு நீதிமன்றம் ரசாக் பகிந்தாவின் நெருங்கிய நண்பருக்கு சபீனாவை அனுப்பியுள்ளது.

2002ம் ஆண்டும் இரண்டு ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் மலேசிய அரசியல் பிரமுகர் ஒருவருக்கு கையூட்டுக் கொடுக்கப்பட்டதாக  கூறப்படுவது மீது தொடங்கப்பட்டுள்ள பிரஞ்சு விசாரணையில் சாட்சியமளிக்க வருமாறு கோரும் முதலாவது அழைப்பாணை நேற்றிரவு கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு சாரா அமைப்பான சுவாராம் தகவல் கூறுகிறது.

“நாம் இந்த நேரத்தில் விருந்து மேசைகளில் அமர்ந்திருக்கும் வேளையில் திரு ஜஸ்பீர் சிங் சாஹ்லின் வீட்டுக்கு சபீனா சென்று கொண்டிருக்கிறது.’

“அந்த வழக்கு நல்ல முறையில் முன்னேற்றம் காண்கிறது,” சுவாராம் ஒருங்கிணைப்பாளர் சிந்தியா கேப்ரியல் அறிவித்தார். மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் அந்த வழக்கை தொடுத்து முன்னின்று நடத்தி வருகிறது.

சிந்தியா, அந்த வழக்கிற்கும் நிதி திரட்டும் விருந்தில் உரையாற்றினார். ஜஸ்பீர், பெரிமெக்காரில் அப்துல் ரசாக் பகிந்தாவின் வலதுகரமாக இயங்கியவர் என அவர் சொன்னார். நீர்மூழ்கிகளைக் கொள்முதல் செய்ததில் பெரிமெக்கார் இடைத் தரகராக செயல்பட்டது. அந்த நிறுவனம் வழியாக 500 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகை ‘தரகுப் பணமாக’ கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

TAGS: