சீன சுயேட்சை பள்ளிகள்: முகைதின் பல்டி

புதிய சீன சுயேட்சை பள்ளிகள் கட்டுவது குறித்த தற்போதைய  நிலைப்பாடு மறு பரிசீலனை செய்யப்படாது என்ற மத்திய அரசாங்கத்தின் முடிவிற்கு முற்றிலும் எதிர்மாறான போக்கை துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார்.

இவ்விவகாரம் குறித்து தாம் பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மசீச ஆகியோருடன் விவாதித்ததாகவும் இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு பல்வேறு ஆலோசனைகளைப் பெற்றதாகவும் இன்று பினாங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில் முகைதின் கூறினார்.

மசீசவை அல்லது தம்மை குறைகூறுவது அல்லது இப்பிரச்னையை பரந்த அளவில் அரசியல் ஆக்குவது போன்றவற்றால் எவ்வித நன்மையும் கிடையாது என்றாரவர்.

“பிள்ளைகளின் எதிர்காலம்தான் முக்கியம். அவர்களுக்கு இடம் அளிக்க முடியுமா என்பதுதான் முக்கியம்”, என்று அவர் இன்று பினாங்கில் வெஸ்டர் டிஜிட்டல் தொழிலாளர்களுடலான ஒரு சந்த்திப்பின்போது கூறினார்.

“எங்களிடம் ஒரு திட்டம் (இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு) இருக்கிறது. அதைப் பற்றி மக்களிடம் பின்னர் கூறுவோம்”, என்று அவர் மேலும் கூறினார்.

 

 

 

 

TAGS: