பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: சோஷலிஸ்ட் கட்சி வெற்றி

பிரான்ஸ் அதிபர் ஹோலண்டின் சோஷலிஸ்ட் கட்சி, நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திடமான‌ பெரும்பாண்மை பெற்றது. மேலும் ஐரோப்பிய பொருளாதார சிக்கலை கருத்தில் கொண்டு அதிக பணம், பட்ஜெட் சலுகைகள் ஆகியவைகளை ஹோலண்ட் கையாளவில்லை என தேர்தல் அமைப்பாளர்களுக்கு தெரியவந்தது.

மாஜி அதிபர் சர்கோஷி கன்சர்வேட்டிவ் கட்சி ‌தேசிய சபையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தது. இதனால் இழப்பு நேரிட்டது. தீவிர வலது தேசிய முன்னணி சிறிய வெற்றி பெற்றிருந்தாலும் நாடாளுமன்றத்தில் முதல் முறையாக முக்கியத்துவம் பெறுகிறது.

இப்புதிய திடமான மற்றும் பெரும் பெரும்பாண்மை, சட்டம் மற்றும் மாற்றங்கள் கொண்டுவர நாட மற்றும் ஐரோப்பாவிலும் பெரும் மதிப்பு கூடும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் லாரண்ட் ‌பேபியஸ், பிரான்ஸ-2 ‌டி.வியில் ‌கூறினார்.