“குவாண்டனாமோ சித்தரவதைகள் வெளிச்சத்துக்கு வந்ததும் நாம் அமெரிக்கர்களுக்கு சாபம் போட்டோம். ஆனால் நாம் அவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லை என்பது இப்போது தெரிந்து விட்டது. ஒரு வேளை அவர்களை விட மோசமாகவும் இருக்கலாம்.”
கமுந்திங்கிலிருந்து கொடுமை எனக் குமுற வைக்கும் ‘சித்தரவதைக் குறிப்புக்கள்’
ஜெஸி: சித்தரவதை சட்ட விரோதமானது. வெறுக்கப்பட வேண்டியது. அத்தகைய மனித நேயமற்ற செயல்களுக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும்.
அத்தகைய சித்தரவதைக் கலாச்சாரம் நமது முறையில் ஊறிப் போய் விட்டது. அதனால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அரசாங்கம் குறிப்பாக உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட முடியுமானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பிஸ்ஸட்: இது போன்று ஏதாவது நிகழும் போது நாம் போலீசார் மீது பழி போடுகிறோம். ஒவ்வொரு முறையும் நாம் அரசாங்கத்தையும் குறை கூறுகிறோம்.
சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கின்றவர்கள் புதிதாகப் பிறந்த சிசுக்களைப் போன்று ஏதுமறியாதவர்களா ? அவர்கள் எதுவுமே செய்யவில்லையா ? தயவு செய்து இறைவன் நமக்குக் கொடுத்த மூளையைப் பயன்படுத்துங்கள்.
ஜேம்ஸ்1067: அவர்களும் நம்மைப் போன்று மனிதர்கள் தானே ? அவர்கள் குற்றம் புரிந்திருந்தால் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுவது தான் முறையான வழி ஆகும்.
சட்டத்தை தங்கள் கரங்களில் எடுத்துக் கொள்ளும் விலங்குகளை விட நாம் தாழ்ந்து விட்டோம். மக்களை அந்த அளவுக்குச் சித்தரவதை செய்கிறோம்.
இன்னொரு மனிதன் அத்தகைய வலியை அனுபவிப்பதைக் கண்டு நாம் சந்தோஷப்படுகிறோமா ? அத்தகைய துன்பத்தைக் கண்டு கிஞ்சித்தும் வருத்தமடையாத மன நிலைக்கு நாம் சென்று விட்டோமா ?
எந்த வகையான மனிதர்கள் அத்தகைய சித்தரவதைகள் தொடருவதை அனுமதிப்பர் அல்லது பார்த்துக் கொண்டிருப்பார்கள் ?
குவாண்டனாமோ சித்தரவதைகள் வெளிச்சத்துக்கு வந்ததும் நாம் அமெரிக்கர்களுக்கு சாபம் போட்டோம். ஆனால் நாம் அவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லை என்பது இப்போது தெரிந்து விட்டது. ஒரு வேளை அவர்களை விட மோசமாகவும் இருக்கலாம்.
பெர்ட் தான்: ஒர் உயர் நிலை போலீஸ் அதிகாரியான முன்னாள் ஐஜிபி அப்துல் ரஹிம் நூர், 1998ம் ஆண்டு அன்வார் இப்ராஹிம் தடுப்புக் காவலில் இருந்த போது அவரது கண்கள் மூடப்பட்டு, தற்காப்பு ஏதும் இல்லாத நிலையில் அவரைக் கோழைத்தனமாக குத்திய சம்பவம் இங்கு நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் தடை செய்யப்பட்டு விட்ட குவாண்டனாமோ பாணி ‘சித்தரவதைகள்’ மலேசியாவில் மீண்டும் தோன்றியுள்ளன.
அர்ட்சன்: சித்தரவதை என ஒன்றுமில்லை என்கிறார் உள்துறை அமைச்சர். எல்லாம் வெறும் குற்றச்சாட்டுக்களே. எண்ணங்களே.
அதற்காகவே நான் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரிக்கிறேன். பிஎன் அரசாங்கத்தை விரட்டுங்கள். அடுத்து சித்தரவதைகளில் ஈடுபட்டவர்களைக் கண்டு பிடியுங்கள். அவர்களை ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் இசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து வையுங்கள்.
அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது அவர்களுக்கு அதே மாதிரி செய்யுங்கள். அந்த பிஎன் கைதிகளுக்கு போதுமான அளவுக்கு கொடுக்கப்பட்ட பின்னர் இசாவை ரத்துச் செய்யுங்கள்.
அடையாளம் இல்லாதவன்#15315623: பக்காத்தான் ராக்யாட் அரசாங்கமாக மாறும் போது தண்டிக்கப்படும் பிஎன் அரசியல்வாதிகளுக்கு இது போன்று நிகழும் என நான் எண்ணவில்லை.
சராஜுன் ஹுடா: நமது போலீஸ் அதிகாரிகள் மனிதர்கள் இல்லையா ? அவர்கள் யார் மீதும் பாசம் வைத்திருக்கவில்லையா ? அந்த போலீஸ் அதிகாரிகளும் அவர்களைப் பெற்ற அவர்களுடைய தாயார்களும் வெட்கப்பட வேண்டும். தீய எண்ணம் கொண்ட மக்களிடமிருந்து தான் தீய நடவடிக்கைகள் பிறக்கும்.
அர்கோனிஸ்ட்: சித்தரவதைகளுக்கான அறிகுறிகளை மருத்துவர்கள் உறுதி செய்ய முடியும். ஆகவே ஆதாரம் காணாமல் போவதற்கு முன்னர் சுஹாக்காம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்ல வேளையாக அந்தக் காயங்கள் சுயமாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை என எந்த அமைச்சரும் சொல்லவில்லை.
வீரா: அத்தகைய நடைமுறைகள் நாட்டிலிருந்து திருடிய தலைவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வைத்திருக்கப்பட வேண்டும். கமுந்திங்கில் அவர்கள் ஒரு நாள் கூட தாங்க முடியாது.