என்ன செய்ய வேண்டும் என்பது எம்ஏஎஸ்-ஸூக்குத் தெரியும் ஆனால் செய்யாது

 “செலவுக்குறைப்பா. எம்ஏஎஸ் அதைப் பற்றிப் பேசத்தான் செய்யும். செயலில் காட்டாது. அது எந்தக் காலத்திலும் ஒரு தொழில்நிறுவனமாக நடத்தப்பட்டதில்லையே.”

 

 

எம்ஏஎஸ் எதிர்காலத்தில் செலவுகளைக் குறைக்க பணியாளர்களைக் குறைக்கக்கூடும்

பிஎம்ஜேஆர்: எம்ஏஎஸ் தலைவர் முகம்மட் நோர் யூசுப் பொறுப்பேற்றவுடன் செய்திருக்க வேண்டிய வேலை.இப்போதுதான் அதைப் பற்றிப் பேசுகிறார்.

மலாய்க்காரர்களுக்கு வேலை கொடுக்கும் ஒரு நிறுவனம் எம்ஏஎஸ்.அப்படி இருக்கும்போது அதில் அதிகப்படியாகவுள்ள பணியாளர்களைக் குறைக்கும் துணிச்சல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு நிச்சயமாக இருக்காது.

பையுன்செங்: செலவுக் குறைப்பை நீண்ட காலத்துக்குமுன்பே செய்திருக்க வேண்டும்.எவ்வளவு மிச்சப்பட்டிருக்கும்.

ஆனால், எம்ஏஎஸ்ஸில் இன்னமும் கம்பத்து மனப்போக்குத்தான் நிலவுகிறது.அதனால், செய்ய வேண்டியதைச் செய்யாமல் தாமதப்படுத்துகிறது.அதனால் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்ட வரிப்பணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.அதில் இழக்கப்பட்ட பில்லியன்களை மக்களின் நல்வாழ்வுக்காக எப்படியெல்லாமோ பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

சேமுவெல் இங்: ஏர் ஏசியாவில் ஒரு விமானிக்கு எத்தனை பொது ஊழியர்கள்?எம்ஏஎஸ்-ஸில் ஒரு விமானிக்கு எத்தனை பொது ஊழியர்கள்?இந்த விகிதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் ஆதாயத்தின் இரகசியம் அல்லது எம்ஏஎஸ்ஸில் பணம் விரயமாகும் இரகசியம் தெரிந்து விடும்.

2லான்: எம்ஏஎஸ்-ஸில் திருப்பம் காண நினைத்தால்  தகுதியானவர்களிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

விழிப்பானவன்: எம்ஏஎஸ், எஸ்ஐஏ(சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்)-உடன் இணைய வேண்டும்.நிர்வாகப்பொறுப்பை எஸ்ஐஏ-யிடம் விட்டுவிட வேண்டும்.அரசாங்கமும் முதலீட்டாளர்களும் ஆதாயம் பெறுவது உறுதி, பயணிகளுக்கும் நியாயமான கட்டணத்தில் பயணச் சேவைகள் கிடைக்கும்.

இல்லையென்றால், காலம் பூராவும் திருத்தி அமைக்கும் படலம் தொடரும், கடனிலிருந்து மீட்டெடுக்கும் படலம் தொடரும், ஆள்குறைப்புப் பற்றிய பேச்சு தொடரும் ஆனால், எதுவும் நடக்காது.

எத்தனை தடவை திருத்தி அமைக்கப்பட்டது, புத்துயிர் கொடுக்கப்பட்டது? கேட்டால்… தேசிய கெளரவம் என்பார்கள்.

ஆள்குறைக்கப்படுவது நல்லதல்ல என்பது உண்மைதான். ஆனால், அவர்களை அப்படியே வைத்திருப்பதால் மக்களின் வரிப்பணம் அல்லவா வீணாகிறது.

முன்னாள் அமைச்சரின் மகனுக்கு ரிம128மில்லியன் குத்தகையில் தொடர்பு

தலைவெட்டி: 25 வயதுதான் ஆகிறது.அதற்குள் ரிம130மில்லியன் குத்தகை தூக்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.என்எப்சி விவகாரம்போல் அல்லவா இருக்கிறது. அப்பாவைக் கேட்டால் எனக்கு இதில் தொடர்பில்லை என்பார்.

என்னங்கிறேன்: மறுபடியும் …..ஓர் அல்லக்கை.

நாட்டை ஆள்வதில் பிஎன்/அம்னோ சாதனை புரிந்திருப்பதாக பிரதமர் கூறுகிறாரே, அது இதுதானா?

இப்படிப்பட்ட அரசாங்கம் நமக்குத் தேவையா?

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுமுறை.பல உயிர்கள் சம்பந்தப்பட்டது.

பெயரிலி#07443216:அந்த முறை நன்றாக செயல்படுவதாக போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா கூறுவதைப் பார்த்தால் குத்தகை கமுக்கமாக வழங்கப்பட்டதில் அவருக்கும் தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறது.

TAGS: