‘Opps2020’ பற்றிப் புலானாய்வு செய்ய வேண்டும் என மாணவர் அமைப்புக்கள் நெருக்குதல்

பல்கலைக்கழக தேர்தல்களில் தில்லுமுல்லு செய்வதற்கு அல்லது ‘தீவிரமான நடவடிக்கை’ எடுப்பதற்கு அம்னோ சதி செய்ததாகக் கூறப்படுவதை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என மாணவர் அமைப்புக்களின் கூட்டணி ஒன்று கோரியுள்ளது.

“அரசாங்கம் இந்தப் பிரச்னையை கடுமையாக எடுத்துக் கொண்டு முழுமையான ஆய்வைத் தொடங்க வேண்டும் அல்லது நாங்கள் அந்த நடவடிக்கையை முறியடிப்பதற்கு தீவிரமான நடவடிக்கையை எடுப்போம்,” என pro- Mahasiswa Nasional ( PMN )பேச்சாளர் Edikoup Lakip Sediyanto ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சதித் திட்டம் என அழைக்கப்படும் அதில் சம்பந்தப்பட்டுள்ள தனி நபர்கள் தாங்களாகவே முன்வந்து ஒப்புக் கொண்டு விளக்கமளிக்க வேண்டும் என அவர் சொன்னார்.

இல்லையென்றால் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் அந்த கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள்  அவர்களை அம்பலப்படுத்துவர் என அவர் எச்சரித்தார்.

‘Opps2020′ தலைப்பைக் கொண்ட நடவடிக்கையை ஏற்பாடு செய்யும் பொருட்டு 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி அம்னோ தலைவர்களும் அமைச்சர்களுடைய உதவியாளர்களும் அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் கூட்டம் நடத்தியதாக நேற்று PMNம் SMM என்ற Solidariti Mahasiswa Malaysia அமைப்பும் கூறிக் கொண்டன.

பல்கலைக்கழக மாணவர் தேர்தல்களில் அரசாங்கத்துக்கு ஆதரவான குழுக்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்வது அந்தக் கூட்டத்தின் நோக்கம் என்றும் கூறப்பட்டது.

அந்த கூட்டத்துக்கு பிடிஎன் தேசிய குடியியல் பிரிவின் அதிகாரியும் பிரதமரின் சிறப்பு அதிகாரியுமான ஈர்மோஹிஸாம் இப்ராஹிம் தலைமை தாங்கியதாக தங்களுக்கு கிடைத்த அந்தக் கூட்டக் குறிப்புக்கள் தெரிவித்ததாக அந்த அமைப்புக்கள் கூறின.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அம்னோ  இளைஞர் பிரிவு உதவித் தலைவரும் அதன் கல்விப் பிரிவும் தலைவருமான ரசாலி இப்ராஹிம் அம்னோ இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் துன் பைசால் இஸ்மாயில் அஜிஸ் ஆகியோர் அம்னோ தலைவர்கள் ஆவர்.

“பல்கலைக்கழகங்களில் ஒரே ஒரு கட்சியை மட்டும் போதிப்பது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முரணானது,” என Edikoup சொன்னார்.

அம்னோ அரசாங்க எந்திரத்தை அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய அவர் மாணவர் ஜனநாயகத்தை குலைப்பதற்கு பிடிஎன், உயர் கல்வி அமைச்சு, போலீஸ் போன்ற அமைப்புக்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய சதித் திட்டம் பற்றித் தமக்கு ஏதும் தெரியாது என உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா கூறுவதை அந்த மாணவர் போராளி நம்பவில்லை.

“உயர் கல்வி அமைச்சருடைய அரசியல் செயலாளர் முகமட் கைரி பின் ஏ மாலிக்கும் சிறப்பு அதிகாரி முகமட் அரீப் அட்னானும் மற்ற உயர் கல்வி அமைச்சு அதிகாரிகளுடன் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள போது அவருக்கு அது எப்படித் தெரியாமல் போகும் ? என அவர் வினவினார்.

“நாங்கள் அந்தப் பிரச்னை தீரும் வரையில் அமைதியாக இருக்கப் போவதில்லை.”

“மாணவர்களுடைய நலனும் அறிவாற்றலும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் ஆவர். அவர்களுக்கு முதிர்ச்சி அடைந்த திறந்த கல்வி முறை அவசியமாகும்,” என Edikoup மேலும் கூறினார்.

ரசாலி, துன் பைசால் மற்றும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் தனி நபர்களுடன் தொடர்பு கொள்ள மலேசியாகினி மேற்கொண்ட முயற்சி பயன் தரவில்லை.

 

TAGS: