“அம்பிகா கௌரவமான மாது. மலாய்க்காரர்கள்- மலாய்க்காரர் அல்லாதார் என அனைத்து மலேசியர்களுடைய முழு ஆதரவையும் அவர் பெற்றுள்ளார்.”
அம்பிகாவைத் தூற்றுவதால் பிஎன் இந்தியர் வாக்குகளை இழக்க நேரிடும்
உண்மையான வீரன்: பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஒரு சாதாரண மனிதர். அரசாங்கம் மேற்கொண்ட விவேகமற்ற நடவடிக்கைகளினால் அவர் சிறந்த மனிதராக மாற்றப்பட்டுள்ளதாக மஇகா உதவித் தலைவர் எம் சரவணன் சொல்லியிருக்கிறார். என்ன அபத்தம் ! அம்பிகா சிறந்த மனிதர். சரவணன் மிக, மிக சாதாரணமானவர் !
அபாஸிர்: அம்பிகா ஸ்ரீனிவாசன் நியாயமான சிந்தனைகளைக் கொண்ட அனைத்து மலேசியர்களையும் பிரதிநிதிக்கிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இனவாத அடிப்படையிலான சிந்தனைகளில் ஊறிப்போன சிந்தனை வறண்டு விட்ட மலேசியர்களே அவரை உண்மையான மலேசியா விசுவாசியாகப் பார்க்காமல் ஒர் இந்தியராக எண்ணுவர். அந்த ஊடக பச்சோந்திகள் ஆட்சி கவிழும் போது வேறு பல்லவியைப் பாடுவார்கள்.
எஸ்ஏ டாம்ஸ்: நடப்பு மலாக்கா முதலமைச்சர் ஒர் விருந்தினராக அழைக்கப்பட்ட நிகழ்வு ஒன்றின் போது தமது உபசரணையாளர்களை தாறுமாறாக பேசியதால் பேராளர்கள் வெளிநடப்புச் செய்ததை பிபிபி வெகு விரைவில் மறந்து விட்டதாகத் தோன்றுகிறது.
அம்பிகா கௌரவமான மாது. மலாய்க்காரர்கள்- மலாய்க்காரர் அல்லாதார் என அனைத்து மலேசியர்களுடைய முழு ஆதரவையும் அவர் பெற்றுள்ளார்.
அவர் எதிர்பாராமல் ஹீரோயினாகி இருக்கலாம். ஆனால் அவர் சரியான சிந்தனையுடைய மனிதர். மௌனமாக இருக்கும் பெரும்பான்மை மக்களுடைய உணர்வுகளை அவர் எடுத்துரைக்கிறார்.
அடையாளம் இல்லாதவன் #58437020: 55 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைமைத்துவம் தனக்கு பொருத்தமான மனிதரைக் கண்டு பிடித்துள்ளது. அது தான் அம்பிகா. அம்பிகா அவர்களே, மலேசியர்கள் உங்கள் பக்கம் இருக்கின்றனர். அவர்கள் உங்களுக்கு 350,000 ரிங்கிட் அபராதம் விதித்தால் மலேசியர்கள் வங்கிக் கணக்கு ஒன்றுக்கு அடுத்த சில மணி நேரங்களில் மலேசியர்கள் அனுப்பி விடுவார்கள். டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் விதித்துள்ள அபராதத்தை நாங்கள் கட்டி விடுவோம். விரைவில் அதிகாரத்துக்கு வரப் போகும் புதிய மலேசியாவுக்கு அது தடையாக இருக்கக் கூடாது.
விஜார்ஜ்மை: அந்தக் கட்டுரை அம்பிகாவுக்கு இளைய தலைமுறையினர் வழங்கியுள்ள சிறப்பு நிலையை அல்லது தேசிய முக்கியத்துவததை குறைப்பதற்கான வலையாக இருக்க வேண்டும். அவர் ஒர் இந்தியர், எனவே அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என அம்னோ வலச்சாரியினர் தங்கள் தொகுதி வாக்காளர்களுக்குச் சொல்ல விரும்புகின்றனர். அந்த வகையில் அந்த எழுத்தாளர் நம்மில் சிலரை நம்ப வைத்திருக்கக் கூடும்.
மலேசிய இந்தியர்களில் பெரும்பகுதியினர் வறுமையில் வாடுவதை உறுதி செய்யவே அம்னோ வலச்சாரியினர் விரும்புகின்றனர். அப்படி இருந்தால் தான் தங்களுடைய ஆட்டத்தில் இந்தியர்களை பகடைக் காய்களாக அவர்கள் எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பால் டினோ: நான் எப்போதும் எந்த ஒரு அரசியல்வாதியுடனோ அல்லது பிரபலமானவர்களுடனோ படம் எடுத்துக் கொள்வதை விரும்புவது இல்லை. ஆனால் அம்பிகாவுக்கு பக்கத்தில் நின்று கொண்டு படம் எடுத்துக் கொள்ள முடியுமானால் உலகில் மிகவும் பெருமை அடைந்த மனிதனாக நான் இருப்பேன்.
Bdnhg21423: அம்பிகா ஒர் இந்திய வீரர் என படம் பிடித்துக் காட்டுவது மற்ற மலேசியர்களிடமிருந்து அவரைப் பிரித்து அவருடைய சிறப்பு நிலையை நடுநிலைப்படுத்த பிஎன் திட்டமிட்டு தொடங்கியுள்ள முயற்சி அது என நான் எண்ணுகிறேன்.
அடையாளம் இல்லாதவன் #90800716: நான் ‘Bdnhg21423’ சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். இன, சமய வேறுபாடின்றி அவர் அனைத்து மலேசியர்களையும் இணைத்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் பிஎன் அதனைச் செய்ய முடியவில்லையே ?
பீட்ஸடாப்: பிஎன்-னுக்கு இந்தியர் வாக்குகள் தேவை இல்லை. சீனர் வாக்குகளும் அவசியமில்லை. அதற்கு பெர்க்காசா வாக்குகள் மட்டும் போதும். ஆகவே 13வது பொதுத் தேர்தலில் நாம் அவர்களுக்கு காட்டுவோம்.
மலேசியா குரல்: அம்பிகா என்றால் “அன்னை; நல்ல பெண்மணி” கருணையுள்ளம் கொண்டவர் என அர்த்தம்.
நேரடியானவன்: அம்பிகாவைத் தூற்றுவதால் எல்லா வாழ்க்கை நிலைகளையும் சார்ந்த பெரும் எண்ணிக்கையிலான மக்களை அந்த துணிச்சலான ஹீரோயின் மீது அனுதாபம் கொள்ளச் செய்துள்ளது. அதனால் அதிகமான வாக்குகள் பிஎன்-னிலிருந்து பக்காத்தானுக்கு மாறும்.
உண்மை மலேசியன்: பெர்சே-யையும் அம்பிகாவையும் தூற்றுவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனும் செய்துள்ள முடிவு குறுகிய கண்ணோட்டத்தைக் கொண்டதாகும்.
பெர்சே-யுடன் அவர்கள் நேர்மையாக விவாதம் நடத்துவதற்கு அவர்களுடைய வரட்டுப் பிடிவாதம் இடம் கொடுக்கவில்லை.
அனாக் ஜேபி: அது மட்டுமல்ல. பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு பெர்க்காசா நடத்திய ஈமச் சடங்குகள் சீன சமூகத்தில் கசப்பான உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடவடிக்கை அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெர்க்காசா அம்னோ அங்கீகாரம் பெற்றுள்ளதாகவே கருதப்படுகின்றது. அதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆலோசகராக இருக்கிறார். அதனால் பிஎன், பல சீனர் வாக்குகளை இழந்துள்ளது.
சிந்தனைக் களஞ்சியம்: பக்காத்தான் பக்கம் அதிகம் அதிகமான வாக்குகளை திசை திருப்பி விடும் கதைகளை ஜோடித்து வெளியிடும் முக்கிய ஊடகங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதனைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள். கர்மம் என ஒன்றுள்ளதை மறக்க வேண்டாம். பிஎன் நடவடிக்கைகள் நிச்சயம் அதனையே திருப்பித் தாக்கும்.