துருக்கியின் எப்-4 ஜெட் போர் விமானம் சிரியா கடற்கரை பகுதியில் உள்ள ஹாடே மாகாணத்தில் பறந்தது. அப்போது திடீரென சிரியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து விட்டது.
இதை கண்காணித்த சிரியா இராணுவம் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஹாடேயில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் எர்ஹாக் விமான படை தளம் நோக்கி சென்றது. ஆனால் புறப்பட்ட 90 நிமிடத்துக்கு பிறகு ரேடியோ தகவல் துண்டிக்கப்பட்டது.
எனவே, அந்த விமானத்தின் நிலை குறித்து துருக்கி இராணுவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான் அதை சிரியா சுட்டு வீழ்த்தியது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து துருக்கி பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகன் அவசர கூட்டத்தை கூட்டினார். அதில், உள்துறை மந்திரி, வெளியுறவு மந்திரி மற்றும்ஈராணுவ தலைமை தளபதி ஜெனரல் நெக்டெட் ஓசெல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் இருந்து பக்கத்து நாடான துருக்கியுடன் இருந்த உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் இருந்து சுமார் 1 லட்சம் பேர் துருக்கிக்கு அகதிகளாக சென்று தங்கியுள்ளனர்.