இப்போது ரத்துச் செய்யப்பட்டு விட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் கொடுமையான சித்தரவதைகள் பற்றி விவாதிக்க வகை செய்யும் பிரேரணை ஒன்று ஒன்று மக்களவை சபாநாயகர் அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டது.
நாடாளுமன்ற நிரந்தர ஆணை 18ன் கீழ் அந்தத் தீர்மானத்தை டிஏபி பாக்ரி எம்பி எர் தெக் ஹுவா தாக்கல் செய்தார்.
கமுந்திங் தடுப்புக் காவல் முகாமிலிருந்து வெளியே கடத்தப்பட்டதாக கூறப்படும் குறிப்புக்களில் அடங்கியுள்ள சித்தரவதைகள் எனச் சொல்லப்படும் நிகழ்வுகளை மலேசியாகினி வெளியிட்டுள்ளதையும் அதனை சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் எடுத்துக்காட்டியிருப்பதையும் அந்தத் தீர்மானம் சுட்டிக் காட்டியுள்ளது.
அந்தக் கடுமையான குற்றச்சாட்டுக்கள் நமது தேசியத் தோற்றத்துக்குப் பாதகமாக இருப்பதால் மக்களவை அந்த விஷயத்தை விவாதிக்க வேண்டும் என எர் விரும்புகிறார்.