ஐஎஸ்ஏ கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் பற்றி அறிய விரும்புகிறது இந்திய…

இந்திய தூதரகம், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய நாட்டவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது பற்றித் தகவல் அளிக்குமாறு மலேசிய அரசாங்கத்திடம் எழுதிக் கேட்டிருக்கிறது. “காவலில் உள்ளவர்கள் உள்பட, இந்திய குடிமக்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கிறோம். இவ்விவகாரம் தொடர்பில் கூடுதல் தகவல் கேட்டு இந்திய தூதரகம் மலேசிய அரசாங்கத்துக்கு…

தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும் என ஐஎஸ்ஏ கைதிகளுக்கு மிரட்டல்

 உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ஐஎஸ்ஏ) கைதிகளின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும் என்று போலீஸ் சிறப்புப் பிரிவு (எஸ்பி) அதிகாரிகள் மிரட்டி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக கைதிகளில் இருவர், நேற்று வழக்குரைஞர்கள் குழு ஒன்று கமுந்திங் தடுப்பு முகாமுக்குச் சென்றபோது அதனிடம் பேச மறுத்தனர். வழக்குரைஞர்களிடம் பேசினால் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும்…

இசா கைதிகளுடைய அவலத்தை விவாதிக்க வகை செய்யும் பிரேரணை சமர்பிக்கப்பட்டது

இப்போது ரத்துச் செய்யப்பட்டு விட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது நடத்தப்பட்டதாக  கூறப்படும் கொடுமையான சித்தரவதைகள் பற்றி விவாதிக்க வகை செய்யும் பிரேரணை ஒன்று ஒன்று மக்களவை சபாநாயகர் அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற நிரந்தர ஆணை 18ன் கீழ் அந்தத் தீர்மானத்தை…

தடுத்துவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர் பற்றி அந்நாட்டுத் தூதரகங்களுக்குத் தெரியாது

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ் தங்கள் நாட்டவர் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றி அந்தந்த நாட்டுத் தூதரகங்கள் அறியாதிருப்பதாக மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) தெரிவித்துள்ளது. சுஹாகாம் ஐந்து தூதரகங்களின் பிரதிநிதிகளிடம் பேசியதாகவும் அவை, அது பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டதாகவும் ஆணையர் ஜேம்ஸ் நாயகம் கூறினார். “நான்…

ஐஎஸ்ஏ கைதிகள் இருவர் உண்ணாவிரதம் தொடங்கினர்

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள்.விடுதலை செய்யப்படுவதாகத் தெரியவில்லை. அவ்விருவரும் வியாழக்கிழமை  இரண்டாம் தடவையாக உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.பேராக், கமுந்திங் தடுப்புமுகாமில் உள்ள கைதிகள் இருவர்தான் இப்படி உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியிருப்பவர்கள். மலேசியர்களான அவ்விரு கைதிகளும் மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) தங்கள் விடுதலைக்கு ஏற்பாடு செய்யும்வரை காத்திருக்க விரும்பவில்லை என சுதந்திரத்துக்குப் போராடும்…

இசா கைதிகள் தங்கள் தலைவிதியை அறிந்து கொள்ள இன்னும் ஒரு…

பேராக் கமுந்திங்கில் உள்ள இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள், தாங்கள் சட்ட ரீதியாக குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்க வேண்டுமா அல்லது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா என்பதை அறிந்து கொள்ள இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அந்த மய்யத்தில் உள்ள 45 கைதிகளுடைய நிலையை மறு…

சுஹாக்காம் குழுவைச் சந்தித்ததும் இசா கைதிகள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்

சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையத்தின் குழுவைச் சந்தித்த பின்னர் ஆறு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (இசா) கைதிகள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நிறுத்திக் கொண்டனர். அவர்களில் நால்வர் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம் இருந்ததாகவும் மேலும் இருவர் மே 16ம் தேதி தொடங்கியதாகவும் சுஹாக்காம்…

விடுதலை நம்பிக்கை குலைந்ததும் உண்ணாவிரதப் போராட்டம்

ஹாஜ்ஜா சிபி வீராவு பேரப் பிள்ளை ஒன்று மடியில் வைத்துக் கொண்டு தம்முடைய மூத்த பிள்ளை எழுதிய பல கடிதங்களை காட்டினார். "தாங்கள் விடுதலை செய்யப்படுவோம் என அவர்கள் மிக்க நம்பிக்கை வைத்திருந்தனர்" என கமுந்திங் தடுப்பு மய்யத்திலிருந்து சிறைச்சாலை வழங்கிய தாளில் தமது புதல்வரான முகமட் பாட்சுல்லா…

உண்ணா விரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள இசா கைதிகளை சுஹாக்காம் சந்திக்கும்

பேராக் கமுந்திங் தடுப்புக் காவல் மய்யத்தில் உண்ணா விரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத் தடுப்புக் காவல் (இசா) கைதிகளைக் காண்பதற்கு சுஹாக்காம் என்னும் தேசிய மனித உரிமை ஆணையம் வெள்ளிக்கிழமை அங்கு செல்லும். அந்தக் கைதிகளின் உடல் நிலையைச் சோதிப்பதற்காக மூவர் கொண்ட குழு ஒன்று…