வட அயர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் அரசி எலிசபெத், ஐரிஷ் கிளர்ச்சிக் குழுவான ஐ ஆ ஏ அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போது வட அயர்லாந்தில் முதல் துணை முதலமைச்சராகவும் உள்ள மார்டின் மெக்கின்ஸுடன் கைகுலுக்கியுள்ளார்.
பெல்ஃபாஸ்ட்டிலுள்ள ஒரு அரங்கில் இடம்பெற்ற இச்சம்பவம், வட அயர்லாந்தில் அமைதியை ஏற்படுத்தும் வழிமுறைகளில், குறியீட்டளவில் ஒரு முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.
வட அயர்லாந்து கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிந்து, அயர்லாந்து குடியரசுடன் ஒன்றாக இணைவதற்கு எதிராக மெக்கின்னிஸ் நீண்ட காலமாக போராடி வந்தார்.
அங்கு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பல தசாபதங்களாக போராடி வந்த ஐ ஆர் ஏ, எலிசபெத் அரசியின் நெருங்கிய உறவினரான மவுண்பேட்டன் பிரபுவை ஒரு குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கொலை செய்தனர்.
தனது வைர விழாவின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் அரசி வட அயர்லாந்தில் இரண்டு நாட்களை கழிக்கிறார்.
இதனிடையே நேற்று(26.6.12) செவ்வாய்கிழமை, வட அயர்லாந்தின் தலைநகர் பெல்ஃபாஸ்ட்டில், சுமார் நூறு இளைஞர்கள் காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டுகள் மற்றும் இதர பொருட்களை எறிந்து தாக்குதலை நடத்தினர்.