பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கு எதிராக தாம் “இனவாதத்தை அல்லது தீவிரவாதத்தைத்” தூண்டி விட்டதாகக் கூறப்படுவதை ஸ்ரீ காடிங் பிஎன் எம்பி முகமட் அஜிஸ் மறுத்துள்ளார்.
அம்பிகா தண்டிக்கப்படக் கூடிய சாத்தியம் பற்றி மட்டுமே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக அவர் சொன்னார்.
“அம்பிகா யாங் டி பெர்துவான் அகோங்கிற்கு துரோகம் செய்துள்ளதால் அவர் தூக்கிலிடப்படுவதற்கு தண்டனை விதிக்கப்படுவது பற்றி நாம் பரிசீலிக்க முடியுமா ?” என மக்களவையில் செவ்வாய்க் கிழமை விடுக்கப்பட்ட என் அறிக்கை தெளிவாக கூறுகிறது.”
“அகோங்கிற்கு எதிராக துரோகம் செய்துள்ளாரா இல்லையா என்ற எண்ணத்தின் அடிப்படையில் அது ஒரு கேள்வி என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்துகின்றது,” என முகமட் அஜிஸ் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
2012ம் ஆண்டுக்கான துணை விநியோக மசோதா மீது தாம் ஆற்றிய உரையை ‘திரித்து விட்டதாக’ தம்மை கண்டித்துள்ளவர்களை குறிப்பாக பினாங்கு முதலமைச்சரும் டிஏபி தலைமைச் செயலாளருமான லின் குவான் எங்-கை அவர் சாடினார்.
அந்த விவகாரம் மீது லிம் தெரிவித்த ‘தீய நோக்கம் கொண்ட’ கருத்துக்களே அந்தப் பிரச்னையை ‘இனவாத, சமய விவகாரமாக்கியுள்ளன என்றார் முகமட் அஜிஸ்.