‘அம்பிகாவைத் தூக்கிலிடுங்கள்’ என்ற கருத்தை ஸ்ரீ காடிங் எம்பி மீட்டுக் கொள்கிறார்

தேசத் துரோகத்துக்காக பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா தூக்கிலிடப்பட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பிய தமது கருத்துக்களை சி காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அஜிஸ் மீட்டுக் கொண்டுள்ளார். செவ்வாய்க் கிழமை அவர் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

“நான் கட்டுகோப்பான மனிதன். நான் கட்டுக்கோப்பான கட்சியைச் சேர்ந்தவன். என்னுடைய கருத்துக்கள் மஇகா, பிபிபி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த என சக தலைவர்களுடைய உணர்வுகளை காயப்படுத்தியிருந்தால் பிஎன் சகோதரத்துவ உணர்வுக்கு இணங்க நான் கடந்த செவ்வாய்க் கிழமை விடுத்த என் அறிக்கையை மீட்டுக் கொள்கிறேன்,” என அவர் இன்று மக்களவையில் கூறினார்.

அந்தக் கருத்துக்களை மீட்டுக் கொள்ளுமாறு அந்த ஸ்ரீ காடிங் எம்பி-க்கு துணை சபாநாயகர் வான் ஜுனாய்டி ஜப்பார் உத்தரவிட்டார்.

முகமட், உரிய நடைமுறை ஏதும் பின்பற்றப்படாத நிலையில் தண்டனையை கோரியதின் வழி அவர் “அளவுக்கு மீறிச் சென்று விட்டதால்” அவரது அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாகான் எம்பி லிம் குவான் எங் கேட்டுக் கொண்ட பின்னர் வான் ஜுனாய்டி அவ்வாறு உத்தரவிட்டார்.

 

TAGS: