நஜிப் தமது சொந்த உயிர் வாழ்வுக்காக போராடுகிறார்

“அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றாலும் நஜிப் ஒரு தவணைப் பிரதமராக இருப்பார்.- அதாவது தமக்கு முன்பு பிரதமராக இருந்த அப்துல்லா அகமட் படாவியைப் போன்று.

இப்போதைக்கு சில உண்மையான சந்தேகங்கள்

டேவிட் தாஸ்: உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் அகற்றப்படும் என பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்துள்ளது எதிர்பாராத ஒன்றாகும். அது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சந்தேகம் கொள்வது இயல்பாகும். இந்தக் கட்டத்தில் அது வெறும் அறிவிப்பு மட்டுமே. அது நிறைய எதிர்ப்பார்ப்புக்களைத் தோற்றுவித்துள்ளது. அவை பூர்த்தி செய்யப்படா விட்டால் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் நஜிப்பின் தோற்றத்துக்கும் ஆளும் கூட்டணியின் தோற்றத்திற்கும் களங்கம் ஏற்படும்.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்படுவது தான் நியாயமானது. சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களும் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும். அதுவே நியாயமானது. அந்த மாற்றங்களின் நோக்கம் குலையாமல் இருக்க அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மாற்றங்கள் செய்யப்படுவதும் முக்கியமாகும்.

கேஎஸென்: ஒங் கியான் மிங் தெரிவித்துள்ள சந்தேகம் நியாயமானது ஆகும். இசா-வுக்குப் பதில் அறிமுகமாகும் புதிய சட்டங்கள் – இசா-விலிருந்து மாறுபட்டிருக்குமா ? விசாரணையின்றி தடுத்து வைக்க வகை செய்யுமா ?

ஆகவே அத்தகைய சட்டங்கள் இன, சமய தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே இருக்க வேண்டும். என்றாலும் அவற்றை அமலாக்குவதற்கு முன்பு பாகுபாடு காட்டாத சுயேச்சை குழுக்கள் தணிக்கக செய்ய வேண்டும்.

நாடாளுமன்றம் நிறைவேற்றப் போகும் திருத்தங்களைக் காண்பதற்கு நாம் காத்திருப்போம். அது வரையில் நமது சந்தேகம் தொடரும்.

குவினோபாண்ட்: அப்துல்லா அகமட் படாவியைக் காட்டிலும் நஜிப் கெட்டிக்காரராக இருக்கலாம். ஆனால் அம்னோ இன்னும் அம்னோ தான். அது சுயநலனை முன் வைக்கிறது. வெளிப்படையான குறை கூறல்கள் அதற்கு அரசியல் ரீதியில் சாவு மணியாக இருக்கும் என அது அஞ்சுகிறது.

கட்டுப்பாடுகள் பல நிலைகளில் உள்ளன. ஒன்றை மட்டும் அகற்றுவது நமது சமூகத்தைச் சூழ்ந்துள்ள எல்லா தீமைகளையும் போக்கி விடாது. பிஎன் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து ஊடகங்கள் அம்னோ கட்டுக்குள் இருக்கும் வரையில் முக்கிய ஊடகங்களில் எதிர்க்கட்சிகளுக்கு இடம் கிடைக்கப் போவதில்லை.

அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதாக நான் ஊகிக்கிறேன். அதற்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தம் உட்பட எந்த சீர்திருத்தமும் ஏற்படும் என நான் நம்பவில்லை.

பக்காத்தான் ராக்யாட் அதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தீவிரமாக உழைக்க வேண்டும்.

கீ துவான் சாய்: நஜிப் வெளியீடுகளும் பத்திரிக்கைகளும் ஆண்டுதோறும் அனுமதிகளைப்  புதுப்ப்பிக்க வேண்டும் என்பதை மட்டும் கைவிடுவதற்குப் பதில் அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டத்தையே ரத்து செய்திருக்க வேண்டும்.

வெளியீட்டு அனுமதியை எந்த நேரத்திலும் மீட்டுக் கொள்ளும் அதிகாரம் உள்துறை அமைச்சரிடம் தொடர்ந்து இருக்கப் போகிறது. ஆகவே அமைச்சு ஆட்சேபத்துக்குரியது எனக் கருதும் எந்தச் செய்தி குறித்தும் பத்திரிக்கை ஆசிரியர்களை அழைத்து அவர்களை மிரட்டி அடிபணியச் செய்யலாம்.

உள்துறை அமைச்சின் இரட்டை வேடமும் தொடரும்- உத்துசானை லேசாகத் தட்டுவதும் மற்றவை மீது கடுமையாக நடந்து கொள்வதும் தொடரும். ஆகவே என்ன மாற்றம் ?

லூயிஸ்: ஒங் கியான் மிங், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நஜிப் பல வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளார். அதனால் நான் அவரை நம்பவே மாட்டேன்.

மெர்தேகா அரங்கத்தில் பேரணியை நடத்த அனுமதிக்கும் சாதாரண வாக்குறுதியைக் கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த பெரிய விஷயத்தை அவர் காப்பாற்றுவார் என நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும் ?

அவர் இசா-வை ரத்து செய்தாலும் வேறு பெயரில் அதன் உள்ளடக்கத்தைக் கொண்டு வந்து விடுவார். சிறுத்தையின் புள்ளிகள் எப்போதும் மாறாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நம்பாதவன்: நஜிப் தமது சொந்த அரசியல் உயிர்வாழ்வுக்குப் போராடுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. 2008 தேர்தலில் பிஎன் அடைந்ததைக் காட்டிலும் அதிகமான வெற்றிகளை அவர் காட்ட வேண்டும்.

ஆனால் அதனை அவர் செய்ய முடியாது என்பதை அறிகுறிகள் காட்டுகின்றன. சீனர் ஆதரவு இல்லாமல் அவர் அதனைச் சாதிக்க முடியாது. அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றாலும் நஜிப் ஒரு தவணைப் பிரதமராக மட்டுமே இருப்பார்.- அதாவது தமக்கு முன்பு பிரதமராக இருந்த அப்துல்லா அகமட் படாவியைப் போன்று.

அடையாளம் இல்லாதவன்_4031: டாக்டர் ஒங், நீங்கள் தெரிவித்த காரணங்களுக்கு நன்றி

TAGS: