2012 யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை தொடர்ச்சியாக பார்வையிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த 26 வயதான Jiang Xiaoshan என்ற இளைஞர் போட்டித் தொடரின் சகல போட்டிகளையும் நித்திரை விழித்து பார்வையிட்டதே அவரது மரணத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சீன நேரப்படி நள்ளிரவில் கால்பந்தாட்டப் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதனால் 11 நாட்களாக தூக்கம் விழித்து போட்டிகளை பார்த்துள்ளார்.
அயர்லாந்திற்கும் இத்தாலிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியின் பின்னர் Jiang Xiaoshan மீண்டும் விழிக்கவில்லை. புகைப்பிடித்தல், அதிக மதுபாவனையால் ஏற்கனவே Jiang Xiaoshan இன் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் இதற்கு முன்னரும் கால்பந்தாட்ட ரசிகர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக நித்திரை விழித்து போட்டிகளை பார்த்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.