நஜிப்: இசா ரத்துச் செய்யப்படுவதற்கு பிஎன் மட்டுமே மார் தட்டிக் கொள்ள முடியும்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதென அரசாங்கம் செய்த முடிவுக்குத் தாங்களே காரணம் எனக் கூறிக் கொள்ளும் தரப்புக்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று சாடியுள்ளார்.

மக்களுக்கு செவிசாய்க்கும் பிஎன் – னுக்கு அதற்கான புகழாரம் சூட்டப்பட வேண்டும் என நஜிப் ஷா அலாமில் பேசும் போது கூறினார்.

“இசா சட்டம் மீதான எனது அறிவிப்புக்குத் தங்களுடைய முயற்சிகளே காரணம் என யாரும் கூறிக் கொள்ள வேண்டாம்.”

“அதற்கு அவர்களுடைய போராட்டம் அல்ல. மக்களுடைய விருப்பங்களைச் செவிமடுத்த பின்னர் பிஎன் எடுத்த முடிவு அது”, என அவர் சொன்னார்.

பல ஆண்டுகளாக சமூக அமைப்புக்கள் நெருக்குதல் தொடுத்ததின் விளைவாகவும் பக்காத்தான் ராக்யாட்டின் புக்கு ஜிங்காவில் கூறப்பட்ட வாக்குறுதிகளைத் தொடர்ந்தும் இசாவை ரத்துச் செய்வதென முடிவு செய்யப்பட்டதாக பக்காத்தானும் மனித உரிமை அமைப்புக்களும் கூறியுள்ளன.

“மீண்டும் கூட்டுக்குள் இணைவோம்” ( ‘Sirih Pulang ke Gagang’) என்னும் தலைப்பைக் கொண்ட நிகழ்வில் நஜிப் உரையாற்றினார். அந்த நிகழ்வின் போது, பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்கள் எனக் கூறப்பட்ட 7,000 பேரிடமிருந்து பிஎன் -னில் இணை உறுப்பினர்களாக சேருவதற்கான விண்ணப்பங்களை அவர் அந்த நிகழ்வில் பெற்றுக் கொண்டார்.

TAGS: