பர்மிய இன மோதல்: 90,000 பேர் இடம்பெயர்ந்தனர்

பர்மாவின் மேற்கில் பௌத்த மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வன்முறை மோதல்களில், 90,000 பேர் வரை தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக உதவி நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தாம் அவசரகால உணவு உதவிகளை வழங்கியுள்ளதாக உலக உனவுத்திட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.

பர்மாவிலிருந்து வெளியேறி தமது எல்லைக்குள் நுழைவதற்கு முயற்சித்த அகதிகளை வங்கதேசம் திருப்பி அனுப்பியுள்ளது.

பர்மாவில் மூன்று முஸ்லிம் ஆண்கள் பௌத்த பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் பரவியதை அடுத்து, அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்த மோதல்களில் இதுவரை ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.