“அதிகார துஷ்பிரயோகம், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற அர்சு அமைப்புக்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை விரக்தி அடையச் செய்து நிறுத்துவது- அது தான் அதற்குத் தெரிந்த ஒரே வழி.”
பெர்சே 3.0 அன்வார், அஸ்மின் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
பெர்ட் தான்: அதிகாரத்தை இழக்கும் அச்சம் பிஎன்-னை முடக்கி விட்டது. அதனால் அதற்கு நேரான சிந்தனைகள் இல்லை. மக்கள் மனதைக் கவருவதற்கு விவேகமாக விவாதிக்கும் ஆற்றல் அதனிடம் இல்லை.
அதிகார துஷ்பிரயோகம், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற அர்சு அமைப்புக்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை விரக்தி அடையச் செய்து நிறுத்துவது- அது தான் அதற்குத் தெரிந்த ஒரே வழி.
பிஎன் கொள்கைகளை எதிர்ப்பதாக தாங்கள் சந்தேகிக்கும் யாரையும் மருட்டுவதற்கு ‘தேசியவாத அரசு சாரா அமைப்புக்கள்” என்னும் போர்வையில் குண்டர்களைக் கூட அது நியமித்துள்ளது.
பெர்சே 2.0 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனை ‘முடிப்பதற்கு’ இரண்டு குண்டர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக அம்பிகாவுக்கு மின் அஞ்சல் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன,
இதுதான் அம்னோ கலாச்சாராமா ? நமது கொள்கைகள் ஏன் இவ்வளவு இழி நிலைக்கு தாழ்ந்து விட்டன ? எல்லாவற்றையும் விட கொடுமையானது-நமது பிரதமர் ஏன் இன்னும் மௌனமாக இருக்கிறார் ?
மௌனமாக இருப்பதால் அவர் தவறான செய்தியை அனுப்புகிறார்- அந்த குண்டர்களுக்கு மறைமுகமான ஆதரவை அவர் வழங்குகிறார்.
பல இனம்: பெர்சே 3.0ல் சம்பந்தப்பட்டதற்காக அந்த மூன்று பிகேஆர் தலைவர்கள் மீது குற்றம் சாட்டுவதே, அம்னோ மற்றும் அதிகாரிகளுடைய முட்டாளதனத்தைக் காட்டுகிறது. அவர்கள் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு கூடுதலான அனுதாப வாக்குகளை தேடிக் கொடுத்துள்ளனர்.
ஒடின்: பெயர் பட்டையை அணியாமல் பெர்சே 3.0ல் கலந்து கொண்டவர்களைத் தாக்கிய போலீஸ் அதிகாரிகள் யாரும் ஏன் இது வரையில் அடையாளம் காணப்பட்டு குற்றம் சாட்டப்படவில்லை ?
அந்தப் பேரணியின் போது தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர் ஒருவர், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு உதவியாக அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தப்படவில்லை ?
அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்படக் கூடிய எந்த விஷயமாக இருந்தாலும் மந்தமாக நடைபெறுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்றால் அரசாங்கம் வெகு வேகமாக நடவடிக்கை எடுக்கிறது.
உண்மையில் பிஎன் அரசாங்கத்தின் நிலை பரிதாபமாக உள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பொம்மலாட்டக்காரரான முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆட்டுவிக்கிறார்.
அடையாளம் இல்லாதவன்_40dc: செப்டம்பர் 3க்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடக்காது என்பது இப்போது உறுதியாகத் தெரிந்து விட்டது. அடுத்த தேர்தலில் அன்வாரை நிற்க விடாமல் செய்வதற்கு அம்னோ/பிஎன் பெரு முயற்சி செய்கின்றது.
பொதுத் தேர்தலை எதிர்நோக்குவதற்கு அம்னோ/பிஎன் தயாராக இல்லை. அன்வாரைத் தகுதி இழக்கச் செய்வதற்கு அவை எல்லா வழிகளையும் நாடுகின்றன. அம்னோ/பிஎன் வியூகவாதிகளுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: இது கெட்டிக்காரத்தனமான நடவடிக்கை என எண்ண வேண்டாம். அது உங்களையே திருப்பித் தாக்கும்.
கேண்டபிரிகியான்: டாத்தாரான் மெர்தேக்கா தடுப்புக்களை மக்கள் மீறுவதற்கு அன்வார் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட முடியுமானால் பெர்சே 3.0ன் போது போலீஸ் வன்முறைக்கு உடந்தையாக இருந்ததாக நஜிப் மீதும் குற்றம் சாட்டப்பட்ட வேண்டும்.
ஸ்கோர்பின், அல்தான்துயா, தியோ பெங் ஹாக், என்எப்சி, பிகேஎப்இஸட் எனப் பட்டியல் தொடர்ந்து நீளும். கண்ணாடி வீட்டுக்குள் வாழ்கின்றவர்கள் சி4 ரக வெடி மருந்துகளை எறியக் கூடாது.