‘நீதிமன்றத் தீர்ப்பு ஆதாரங்கள் வைக்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியத்தை காட்டுகின்றன’

“டிஎஸ்பி ஜுட் பெரெரா கடமையை மீறியுள்ளாரா என்பது மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆதாரங்கள் சேதப்படுத்தப்பட்டனவா என்பதௌ அதிகாரிகள் அவசியம் விசாரிக்க வேண்டும்.”

குதப்புணர்ச்சி வழக்கு  IIல் நீதிமன்றம் எழுத்துப்பூர்வமான தீர்ப்பை வழங்கியுள்ளது

பெர்ட் தான்: இப்போது நீதிபதி அதனை உறுதி செய்துள்ளார். அதாவது டிஎன்ஏ என்ற மரபணு மாதிரிகளின் நேர்மை விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

முதுநிலை போலீஸ் அதிகாரியான ஜுட் பெரெரா மீண்டும் சிட்டை ஒட்டுவதற்காக தேவையில்லாமல் அந்த பிளாஸ்டிக் பையை வெட்டியுள்ளது மறுக்கப்படவில்லை என நீதிபதி மேலும் கூறியுள்ளார்.

அவர் அந்த வேலையச் செய்யக் கூடாது என விதிகள் இருக்கும் போது தமது கடமையை அப்பட்டமாக மீறியதற்காக தண்டிக்கப்பட வேண்டும் அல்லவா ?

தாம் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்பது முதுநிலை போலீஸ் அதிகாரி என்ற முறையில் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். மிக முக்கியமான ஆதாரங்களை/மாதிரிகளை நடைமுறைகளுக்கு ஏற்ப கையாள அவர் தவறி விட்டார்.

அவருக்கு கெட்ட/தீய நோக்கம் இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணமே எழுகிறது. போலீஸ் படையின் நேர்மையில் நாம் மீண்டும் நம்பிக்கை வைக்க வேண்டும் என தேசிய போலீஸ் படைத் தலைவர் விரும்பினால் தமது அதிகாரிகள் மீது தண்டனை நடவடிக்கைகளை அவர் எடுப்பது அவசியமாகும்.

வீரா: சுருக்கமாகச் சொன்னால் பிஎன் ஊடகங்கள் பல மாதங்களாக பொய்களையும் அழுக்குகளையும் வெளியிட்ட பின்னர்- அந்த டிஎன்ஏ விந்து வைக்கப்பட்டது என மக்களுக்கு ஏற்கனவே தெரிந்துள்ளதை நீதிமன்றம் இறுதியாக ஒப்புக் கொண்டுள்ளது.

லிம் சொங் லியோங்: அந்த டிஎன்ஏ ஆதாரம் மூன்று நாட்களுக்கு மலம் கழிக்காமல் தெளிவாக நல்ல நிலையில் இருந்தது எனக் கூறப்படுவது தான் ஐயத்தை ஏற்படுத்தியது.

அதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உண்டு. அதாவது அது வைக்கப்பட்டுள்ளது. சட்டத்துறைத் தலைவர், விசாரணையில் போலீசாரின் நடத்தை, பொய்ப் புகாரைக் கொடுத்தவர், அரசு தரப்பு ஆகியவை மீது முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

குரங்குப் பிடி: குதப்புணர்ச்சி வழக்கு  I, II ஆகியவை உண்மையில் திரைப்படக் காட்சிகளைப் போல ஜோடிக்கப்பட்டவை. ஆகவே மலேசியர்கள் இன்னொரு அத்தியாயத்திற்குத் தயாராக இல்லை. அதனால் குதப்புணர்ச்சி  III தோல்வி காண்பது திண்ணம். ஏனெனில் நாடு உள்ளத்தாலும் உடலாலும் ஆன்மாவாலும் சோர்வடைந்து விட்டது.

அடையாளம் இல்லாதவன் ஏ: இந்த நீதிமன்றமும் வெகு நாளைக்கு  முன்பே அந்த வழக்கை தூக்கி எறிந்திருக்கும். ஆனால் இது ஆணையின் கீழ் செயல்படும் நீதிமன்றமாகும். குதப்புணர்ச்சி பகுதி இரண்டு மீது அனைத்துலக நெருக்குதல் மிக மிக அதிகமாக இருந்தது என நான் நினைக்கிறேன்.

ஆதாரம் இல்லாமல் எல்லா இடங்களிலும் ஒட்டை இருக்கும் போது எப்படித் தண்டிப்பது ? இளமையாகவும் நல்ல தோற்றத்துடனும் இருப்பதால் புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி  அஸ்லான் நடிக்க முயன்றுள்ளார் என நான் சொல்ல விரும்புகிறேன். அந்த வகையில் அவருக்குப்  பாராட்டுக்கள்.

டிஎஸ்பி ஜுட் பெரெரா கடமையை மீறியுள்ளாரா என்பது மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆதாரங்கள் சேதப்படுத்தப்பட்டனவா என்பதை அதிகாரிகள் அவசியம் விசாரிக்க வேண்டும்

TAGS: