இந்தியர் நலன் காக்க பொது விவாதம் செய்வதற்கு மஇகா தேசியத் தலைவர் ஜி. பழனிவேல் தயார் என்றால் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரனும் தயாராக இருப்பதாக ஈப்போ பாராட் ஜசெக செயலாளர் டாக்டர் ஜெயபாலன் கூறினார்.
இந்தியர்களின் தங்களின் உரிமைகளை இழந்துள்ளனர் என்பதற்கு குலா பல்வேறு விஷயங்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்த தயாராக உள்ளதாகவும் இந்த விவாதத்தில் மஇகா தேசியத் தலைவர் பழனிவேல் கலந்து கொண்டால் மட்டுமே குலசேகரன் பங்கேற்பார் என்று டாக்டர் ஜெயபாலன் கூறினார்.
இந்த பொது விவாதமானது மஇகா தலைவருக்கும் குலசேகரனுக்கும் இடையே நடைபெற வேண்டும் என்பதில் ஜசெக உதவிச் செயலாளராகிய குலசேகரன் உறுதியாக உள்ளார் என அவர் மேலும் கூறினார்.
தற்போது வெளிநாடு சென்றுள்ள குலசேகரன் நாடு திரும்பியதும் பொது விவாதத்திற்கு தாயாராவர் என்று டாக்டர் ஜெயபாலன் சொன்னார்.

























