குற்றங்கள்:போலீஸ் அறிக்கைகளில் மட்டும் எண்ணிக்கை குறைந்துள்ளது

உங்கள் கருத்து: “ஹிஷாம் அவர்களே, வழிப்பறிக் கொள்ளை பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று போலீஸ்காரர்களே கேட்டுக்கொள்கிறார்கள். அதனால்தான் ‘குற்றங்கள்’ குறைந்திருப்பதுபோலத் தெரிகிறது.”

ஹிஷாமுடின்: குற்றங்கள் கூடியிருப்பதாக மாற்றுத்தரப்பினர் கூறுவது உண்மையல்ல

டீகி:ஐயா,உள்துறை அமைச்சர் அவர்களே, மக்களிடம் சென்று பேசிப் பாருங்கள்.அப்போது தெரியும் குற்ற நிலவரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பது.

குறிப்பாக, செராசில்.குற்றச்செயல்களுக்குப் பஞ்சமே இல்லை.என்ன,பொதுமக்கள் அவற்றைப் போலீசில் புகார் செய்வதில்லை.அதனை நேரவிரயம் என்றவர்கள் நினைக்கிறார்கள். 

கதைகள்: ஹிஷாம் அவர்களே, வழிப்பறிக் கொள்ளை பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று போலீஸ்காரர்களே கேட்டுக்கொள்கிறார்கள். அதனால்தான் குற்றங்கள் குறைந்திருப்பதுபோலத் தெரிகிறது.சிகை அலங்காரக் கடைக்குச் சென்றால் அங்கு நான்கு வாடிக்கையாளர்கள் இருந்தால் நால்வருமே கொள்ளையரிடம் எதையாவது பறிகொடுத்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஆ போஸ்:ஐயா ஹிஷாமுடின்,சற்றே துயில்நீங்கி எழ வேண்டும். நான் வாழுமிடமான டமன்சாரா ஜெயாவில் குற்றச்செயல் நிகழாத நாளே இல்லை.எஸ்எஸ்2, டமன்சாரா உத்தாமா, சன்வே, கோத்தா டமான்சாரா போன்ற பகுதிகளிலும் அப்படித்தான்.

இவை,சில மாதங்களுக்கு முன்பு குற்றம்-நிகழா பகுதிகளாக விளங்கின.ஆனால், இப்போது பாராங் ஏந்திய கொள்ளையரும் கடத்தல்காரர்களும் கார் திருடர்களும் இவர்களைப் போன்ற பலரும் பெருகிவிட்டனர்.

விழித்துக்கொண்டு உண்மை நிலவரம் என்னவென்பதைக் காணுங்கள்.ஊடகங்களிடம் ஒரு கருத்துக்கணிப்பைச் செய்யச் சொல்லுங்கள்.பொதுமக்களின் உண்மைக் கருத்து என்பது அப்போது தெரியும்.

வொங் ஜியாங்: என் ஊரான செகாமாட்டில் இம்மாதம் மட்டும் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவங்கள் நடந்துள்ளன.இத்தனை ஆண்டுகளாக துப்பாக்கியால் சுடும் சம்பவம் எதுவும் இங்கு நிகழ்ந்ததில்லை.

எப்போதும் நியாயம்: ஹிஷாமுடின், கொஞ்சம் செய்தித்தாள்களையும் வாசிக்க வேண்டும்.செய்தித்தாள்களில் வரும் கடத்தல், கொள்ளை, கொலை பற்றிய செய்திகள் எல்லாம் கதைகள் என்ற நினைப்பா உங்களுக்கு?

பெயரிலி_rb345: ஹிஷாமுடினுக்கும் ‘பாக் லா நோய்’ தொற்றிக்கொண்டுள்ளது.ஐயா, தயை செய்து கடமையில் தூங்காதீர்.

பேரங்காடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த போலீசார் ஒத்துழைப்பதாக செய்திகள் வந்ததை நீங்கள் படிக்கவில்லையா?உள்துறை அமைச்சர் செய்தித்தாள்கள் படிக்காதிருந்தால் எப்படி.

பெயரிலி_3f68:ஹிஷாமுடின் உள்துறை அமைச்சரான பின்னர்தான் குற்ற விகிதம் 89.9விழுக்காடாக உயர்ந்தது.

எட்மண்ட்: குற்றங்களின் பெருக்கத்துக்குத் தீர்வு காண முடியவில்லையென்றால் வாயைப் பொத்திக்கொண்டு இருங்கள்.

 

TAGS: