கலந்துரையாடலை அரசாங்கம் புறக்கணித்தது; ஜாலான் சுல்தான் நில உரிமையாளர்கள் குமுறுகின்றனர்

ஆறு அரசாங்க அமைப்புக்கள் கோலாலம்பூரில் ஜாலான் சுல்தானில் எம்ஆர்டி திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நில உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளன.

டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம், சுற்றுப்பயண அமைச்சு, தகவல் தொடர்பு பண்பாட்டு அமைச்சு , போக்குவரத்து அமைச்சு, பிரதமர் துறை, ஸ்பாட் என்ற நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையம், எம்ஆர்டி கார்ப்பரேஷன் ஆகியவையே அந்த ஆறு அமைப்புக்களாகும்.

கலந்துரையாடல் நடத்தப்படவிருந்த கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தில் ஸ்பாட் அதிகாரி ஒருவர் காணப்பட்டார். ஆனால் கலந்துரையாடல் தொடங்குவதற்கு முன்னரே அவர் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு விட்டார்.