ஹசானுடன் “விவாதம் நடத்த தயார்” என காலித் அறிவிப்பு

பிரபலமான புத்தக வெளியீட்டாளரான KarangKraf, சிலாங்கூர் பாஸ் துணை ஆணையர் III காலித் சமாட்டு-டன் விவாதம் நடத்த முன் வருமாறு முன்னாள் சிலாங்கூர் பாஸ் தலைவர் ஹசான் அலியைக் கேட்டுக் கொண்டதை ஏற்றுக் கொள்ளுமாறு காலித், ஹசானுக்குச் சவால் விடுத்துள்ளார்.

“பிப்ரவரி மாதம் தொடக்கம் என்னுடன் விவாதம் நடத்துமாறு ஹசானை KarangKraf கேட்டுக் கொண்டு வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமது அரசு சாரா அமைப்பான ஜாத்தியின் நிர்வாக மன்றம் அதற்கு ஒப்புக் கொள்ளததால் அந்த யோசனையை நிராகரிப்பதாக ஹசான் சொல்லி வருகிறார்,” என இன்று பிற்பகல் மாநிலச் சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

“நான் அவருடன் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன் என்பதை நான் அவருக்கு சொல்ல விரும்புகிறேன். அவருடன் விவாதம் நடத்துவதற்காக என்னுடைய நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.”

இதற்கு முன்னர் தமக்கும் சிலாங்கூர் பாஸ் ஆணையர் டாக்டர் அப்துல் ரானி ஒஸ்மானுக்கும் இடையில் விவாதம் நடைபெறப் போவதாகக் கூறிக் கொண்டு அது குறித்து விளம்பரம் செய்து வரும் ஹசானை அப்துல் ரானி கடுமையாகச் சாடினார்.

ஹசானுக்கும் தமக்கும் இடையில் விவாதம் நிகழ்வதற்கான இணக்கம் ஏதுமில்லை என்றும் அவர் சொன்னார்.

 

TAGS: