மசீச தலைவர் மன்றம் அதன் தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் மீண்டும் டிஎபி பொதுச் செயலாளர் லிம் குவான் எங்குடன் சொற்போரில் ஈடுபடக்கூடாது என்று தடை விதித்துள்ளது.
இன்று பின்னேரத்தில் நடைபெற்ற அம்மன்றத்தின் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுவா, முந்திய இரு சொற்போர்களையும் லிம் குவான் எங் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார். “மற்றவர்களைத் தாக்குவதற்காக” அவர் அவற்றை பயன்படுத்திக் கொண்டார். விசயம் பற்றி பேசவில்லை என்று கூறினார்.
“நான் எனது நேரத்தை வீணடிப்பதாக அவர்கள் கருதுகின்றனர். லிம் மற்றவர்களைத் தாக்குவதற்குத்தான் விவாதத்தைப் பயன்படுத்துகிறார். கேட்கபட்ட கேள்விக்கு அவர் பதில் அளிப்பதில்லை.
“அவர் செராமா நடத்துவதற்கு திட்டமிட்டு இங்கு வந்தார், விவாதத்தில் பங்குபெறுவதற்கல்ல.”
லிம் மற்றும் சுவா ஆகிய இருவருக்கிடையிலான சொற்போர் முடிவுற்றவுடனே சுவாவுடன் மூன்றாவது சுற்று சொற்போர் நடத்த வேண்டும் என்று கூறப்பட்ட ஆலோசனையை லிம் உடனடியாக நிராகரித்து விட்டார். மாறாக, பிரதமர் நஜிப்பும் பிகேஆர் நடப்பியல் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கிடையில் விவாதம் நடைபெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.