“இது போன்ற ஒப்புதல் வாக்குமூலம் உண்மையில் மகாதீருக்கு விழுந்த பேரடியாகும். அந்தக் கோணல் புத்தியுள்ள ஆன்மா இப்போது என்ன விஷத்தைக் கக்கப் போகிறதோ ?
நஜிப்: அரசியல் ரீதியில் உதவாததால் இசா ரத்துச் செய்யப்பட்டது
மலேசிய இனம்: இசா சட்டம் “பிஎன்-னுக்கு அரசியல் ரீதியில் நன்மையைத் தராததால் ” அது ரத்துச் செய்யப்பட்டது எனப் பிரதமர் நஜிப் ரசாக் குறிப்பாகச் சொல்வதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இந்த நாட்டின் உண்மையான எதிரிகளுக்கு எதிராக என்பதை விட அரசியல் எதிரிகள் மீதே அடிக்கடி பயன்படுத்தப்பட்டது என்பதற்காக கொடூரமான அந்தச் சட்டம் ரத்துச் செய்யப்படவில்லை.
நியாயமே இல்லாத அந்தச் சட்டத்தை ரத்துச் செய்த போது மனித உரிமை அம்சம் குறித்து பிஎன் பரிசீலிக்கவே இல்லை. “அரசியல் ரீதியில் அது நன்மையைத் தருமா இல்லையா” என்பதே அதற்கு முக்கியம்.
ஒடின்: நாம் உண்மையை நஜிப் வாயிலிருந்தே தெரிந்து கொண்டோம். அரசியல் எதிரிகளை முடக்குவதற்கு இசா-வை பிஎன் பயன்படுத்தியது என்பதே அந்த உண்மை.
சிஎன் யீ: பிரதமருடைய ஒப்புதல் வாக்குமூலம் வினோதமாக இருக்கிறது. ‘அரசியல் இலாபத்திற்கும்’ அதிகார வர்க்கத்தின் நன்மைக்காக எதிரிகளுடைய ‘அரசியல் வாழ்க்கையை’ முடிக்கவும் அது பயன்பட்டது என்பதை அவரது வாக்குமூலம் ஒப்புக் கொள்வதாகத் தெரிகிறது.
ஆகவே தேசியப் பாதுகாப்பு பற்றி என்ன சொல்வது ? அந்த கொடூரமான சட்டத்தின் கீழ் துயரங்களை அனுபவித்த நூற்றுக்கணக்கான (ஆயிரக்கணக்காகக் கூட இருக்கலாம்) மக்களுக்கு என்ன நீதி கிடைக்கப் போகிறது ?
இது போன்ற ஒப்புதல் வாக்குமூலம் உண்மையில் மகாதீருக்கு விழுந்த பேரடியாகும். அந்தக் கோணல் புத்தியுள்ள ஆன்மா இப்போது என்ன விஷத்தைக் கக்கப் போகிறதோ ?
டூட்: நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரு காலத்தில் கம்யூனிச மருட்டலைக் கட்டுப்படுத்துவதற்காக அந்தச் சட்டம் இயற்றப்பட்டது. அந்த இசா சட்டம் நியாயமற்றது என்பதால் அது ரத்துச் செய்யப்படவில்லை. மாறாக அம்னோ பிஎன்-னுக்கு அது ‘அரசியல் ரீதியில் உதவாததால்’ ரத்துச் செய்யப்பட்டது.
உண்மையில் அம்னோ/பிஎன் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளதைப் பார்க்கும் போது நஜிப் நஜிப் வாய் தவறிச் சொல்லி விட்டது நமக்கு வியப்பைத் தருகிறது.
பால் வாரென்: ஆகவே அம்னோ/பிஎன்-னுக்கு அரசியல் ரீதியில் சிரமத்தைக் கொடுத்ததால் பலர் அந்த சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டதை நஜிப் இறுதியில் ஒப்புக் கொண்டுள்ளாரா ?
ஆகவே இந்த நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கும் சீனாவில் இப்போது நிகழ்கின்ற விஷயங்களுக்கும் முன்பு சோவியத் யூனியனில் நிகழ்ந்த விஷயங்களுக்கும் வேறுபாடு இல்லை.
நாட்டின் பாதுகாப்புக்கு மருட்டலாக இருக்கின்றவர்களைத் தடுத்து வைப்பதே இசா-வின் நோக்கமாகும். அம்னோ ஆதிக்கம் தொடருவதற்கு அல்ல.
ஒரே குரல்: இசா/ அவசர காலச் சட்டம் மீது பிரதமருடைய ஒப்புதல் வாக்குமூலம் வினோதமாக உள்ளது.
தான் ஹெங் கென்: இசா அரசியல் ரீதியில் உதவவில்லை என நீங்கள் சொல்வதின் அர்த்தம் என்ன ?
உண்மையில் கடந்த 50 ஆண்டுகளாக பிஎன் ஆட்சியில் இருக்க அது உதவியுள்ளது. பிஎன் -னை குறிப்பாக அதன் தவறுகளை அம்பலப்படுத்தும் துணிச்சலைக் கொண்ட அரசியல்வாதிகளைத் தடுத்து வைக்க இசா பயன்படுத்தப்பட்டது. அதனால் வலுவான எதிர்த்தரப்பு உருவாகவில்லை.
அடையாளம் இல்லாதவன் 1234567: இசா குடிமக்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக அம்னோ மக்களை பாதுகாக்க அது உதவியது.